மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

கிரீன் டீ – குடிப்பதால் என்ன பலன்?

 கிரீன் டீ – குடிப்பதால் என்ன பலன்?

விளம்பரம்

காவேரி மருத்துவமனை

கிரீன் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும். டீ, காபி போல கொதிக்க வைக்கவோ பால் சேர்க்கவோ தேவையில்லை. தேவைக்கு தேனோ அல்லது பனங்கற்கண்டு சேர்த்தோ அருந்தலாம்.

கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பை அல்லது இலையை சில நிமிடங்கள்(மூன்று நிமிடங்கள்) வைத்து வடிகட்டி அருந்தலாம். கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுக்கின்றது. அது மட்டுமில்லாமல் மார்பகம், கல்லீரல், நுரையீரல், தொண்டை ,வயிறு, குடல் மற்றும் ரத்தப்புற்று நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக திகழ்கிறது கிரீன் டீ.

சீனர்களும், ஜப்பானியர்களும் அதிகளவில் கிரீன் டீ பயன்படுத்துவதால், உலகளவில் மற்ற நாட்டினரை விட புற்றுநோய் பாதிப்பிலிருந்து இவ்விரு நாட்டு மக்களும் குறைவாக பாதிக்கப்படுகின்றனர்.

இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் பற்களை பாதுகாப்பதோடு, அதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழவைக்கிறது.

தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையைச் சீராக்குவதுடன், மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது. இரத்த அழுத்தம், பக்கவாதம், அல்சர், முகப்பரு, வறண்ட சருமம்(dry skin), தோலில் ஏற்படும் அலர்ஜிகள், மனஅழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வியாதிகளில் இருந்து நம்மை காக்கிறது.

எலும்புகளுக்கு உறுதியையும் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.கிரீன் டீ செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

காவேரி மருத்துவமனை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம்](https://www.kauveryhospital.com/?fbclid=IwAR1frOkMhz-shq8R2E4LMX8fUQtylHF1531UKxVIKxCdp2ZG7-ETKk1yw)

உள்நாட்டு மற்றும் சர்வதேச நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. மருத்துவ வல்லுநர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்கள் அடங்கிய மிகவும் திறமையான பலதரப்பட்ட குழு மூலம் பன்முக சிறப்பு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.

தொடர்பு கொள்ள: +91-431-4022555 / 4077777

விளம்பர பகுதி

சனி, 12 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon