மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

மோடி கையில் வைத்திருந்த கருவி இதுதான்!

மோடி கையில் வைத்திருந்த கருவி இதுதான்!

மாமல்லபுரத்தில் நடைபயிற்சியின் போது கையில் வைத்திருந்த கருவி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11ஆம் தேதி சென்னை வந்தார். கோவளம் ஃபிஷர் மேன் கேவ் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரதமர், நேற்று காலை அங்குள்ள கடற்கரை பகுதிக்குச் சென்று நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் காலி குடிநீர் பாட்டில்களை சேகரித்தார். சுமார் அரை மணி நேரம் வரை இப்பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அதில், பிரதமரின் கைகளில் வித்தியாசமான கருவி ஒன்று இருந்தது. அது என்ன கருவி என்று பலரும் பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தனர்.

கையில் வைத்திருந்தது இதுதான்

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “மாமல்லபுரம் கடற்கரையை சுத்தம் செய்தபோது நான் கைகளில் வைத்திருந்த கருவி என்னவென்று உங்களில் பலர் என்னிடம் கேட்டிருந்தீர்கள். அந்த கருவியின் பெயர் அக்குபிரஷர் ரோலர். அதனை நான் அடிக்கடி பயன்படுத்துகிறேன். எனக்கு மிகவும் உபயோகமான கருவியாக அக்குபிரஷர் ரோலர் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தான் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருப்பது போன்ற சில புகைப்படங்களையும் மோடி பதிவிட்டுள்ளார்.

அக்குபிரஷர் ரோலரின் பயன்

அக்குபஞ்சர் போலவே அக்குபிரஷரும் தொடு சிகிச்சை வகைதான். நமக்கு நாமே செய்துகொள்ளும் எளிய பயிற்சிதான் இந்த அக்குப்பிரஷர். குறிப்பிட்ட புள்ளிகளில், விரல்களால் மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். விரல்கள் மூலமாக அல்லாமல் அக்குபிரஷருக்கு பயன்படுத்த பல்வேறு கருவிகளும் உள்ளன. இதைத்தான் பிரதமர் மோடியும் பயன்படுத்தியிருக்கிறார். இதுபோலவே அக்குபிரஷர் வாட்ச்கள் மற்றும் வளையல்களும் உள்ளன. வலி இருக்கும் இடங்களில் இந்த அக்குபிரஷர் ரோலரை உருட்டுவதன் மூலமாக வலியிலிருந்து விடுபட முடியும்.

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon