மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதல்!

காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதல்!

கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் 370 ஆவது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மூன்றாக பிரிக்கப்பட்டு முற்றிலும் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இன்று (அக்டோபர் 12) தலைநகரான ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் முதல் ஐந்து பேர் வரை காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீநகரின் மையப் பகுதியான லால் சௌக் பகுதியில் ஹரிசிங் மார்க்கெட் பகுதியில் இன்று பகலில் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் மார்க்கெட்டில் இருந்த சுமார் ஐந்து பேருக்கு காயமேற்பட அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் மூடப்படிருக்க சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அந்தக் கடைகளின் அருகே நின்றிருந்தவர்களை நோக்கிதான் கையெறி குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. அப்பகுதியில் நின்றிந்த கார்களின் கண்ணாடிகளும் இதனால் உடைந்தன.

கடந்த சனிக்கிழமை தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்தநாக் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் அருகே நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 14 பேர் காயமடைந்தனர்.

படிப்படியாக இயல்பு வாழ்க்கையை காஷ்மீரில் மீட்டெடுத்து வருதாக மத்திய அரசு சொல்கிறது. இன்று பகல் 12 மணி முதல் போஸ்ட் பெய்ட் மொபைல் போன்கள் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில மணி நேரங்கள் கழித்து இந்த கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

சனி, 12 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon