40 ஆண்டுகளுக்குப் பின் கால்பந்தாட்டத்தை ரசித்த ஈரான் பெண்கள்!

public

பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகமுள்ள நாடான ஈரானில் 40 ஆண்டுகால தடைக்குப் பின் ஆண்கள் கால்பந்து போட்டியை ஈரானிய பெண்கள் கண்டுகளித்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

ஈரான் நாட்டில் கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து ஆண்கள் கால்பந்து போட்டியை மைதானத்திற்கு சென்று நேரில் பெண்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி மைதானத்திற்குள் நுழையும் பெண்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாகி வந்தனர். கடந்த மாதம், கால்பந்து போட்டியை காண்பதற்காக ஆண் போல வேடமணிந்து மைதானத்திற்குள் நுழைந்த ஒரு பெண், கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு முன், அந்தப் பெண் தனக்குத்தானே தீயிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டது நாடெங்கும் அதிர்வை கிளப்பியது.

இவ்விவகாரம் சர்வதேச அளவிலும் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் தலையிட்டு ஈரான் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சின் முடிவில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஆசாதி அரங்கிற்கு நேற்று(அக்.11) 4,000க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து கால்பந்துப் போட்டியை கண்டு ரசித்தனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு இந்த அனுமதி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசாதி மைதானத்தில் நேற்று கம்போடியா அணிக்கும், ஈரான் அணிக்கும் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டி நடந்தது.

ஈரான் முஸ்லிம் பெண்கள், கையில் ஈரான் நாட்டுக் கொடியையும், பதாகைகளையும் ஏந்தி கோஷமிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் போட்டியைக் கண்டு ரசித்தனர். இந்த ஆட்டத்தில் ஈரான் அணி 14-0 என்ற கோல் கணக்கில் கம்போடியாவை வீழ்த்தியது பெண்களின் வருகைக்கு மேலும் உற்சாகம் அளித்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தருணம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *