மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

வருண் விதைக்கும் நம்பிக்கை விதை!

 வருண் விதைக்கும் நம்பிக்கை விதை!

விளம்பரம்

சென்னை அடையாறிலுள்ள புனித லூயிஸ் காது கேளாதோர் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்காப்புக் கலையில் சாதனைகள் படைக்கத் தயாராகிவருகின்றனர்.

இவர்கள் விரல்களால் காற்றினில் ஓவியம் வரைந்து பேசுவது மட்டுமல்ல, காற்றை கிழித்து சிலம்பம் சுற்றுகிறார்கள்; பற்றியெரியும் நெருப்போடு ஓடுகளை உடைத்து தங்கள் வலிமையை பறைசாற்றுகிறார்கள். முக்கியமாக மாணவிகளின் கைகள் எதிர்த்து நிற்கும் எதிரிகளை மடக்கி எல்லையில் எறிகின்றன.

கல்வியோடு கலைகளையும் போதிக்கும் இக் கல்லூரியுடன் கரம் கோர்த்து, மாணக்கர்களின் எதிர்கால வாழ்வுக்கு உரம் போடுகிறார் வருண் அறக்கட்டளை நிறுவனர் வருண் மணியன்.

‘மகிழ்வித்து மகிழ்’ என்பதை வார்த்தைகளாக அல்லாமல் வாழ்க்கையாக மாற்றிக் கொண்டவர் வருண். பிஞ்சு முகங்களின் புன்னகையைக் கண்டு பசியாறும் வருண் அக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்குகிறார்.

நாளை பற்றிய நம்பிக்கையை விதைக்கும் அவரது பேச்சினை மாணவர்கள் கண்களால் வாங்கி இதயத்தில் நிறைத்துக்கொள்கிறார்கள். அந்த நொடி வளமான வாழ்வுக்கான வசந்தம் வீசத் தொடங்குகிறது.

விளம்பர பகுதி

வியாழன், 10 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon