மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

இயற்கை இடுபொருட்கள்: ஈஷா நடத்தும் களப்பயிற்சி முகாம்

 இயற்கை இடுபொருட்கள்: ஈஷா நடத்தும் களப்பயிற்சி முகாம்

விளம்பரம்

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் இயற்கை இடுபொருட்கள் களப்பயிற்சி முகாம் வரும் 13ஆம் தேதி ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சியில் நடைபெறுகிறது.

தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன், ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழிகாட்டுதலில் சத்குருவால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயப் பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பதற்கான களப்பயிற்சி முகாம் வரும் ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 13) திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், தாராட்சி கிராமத்திலுள்ள இன்ஸ்பேஸ் இயற்கை வேளாண் பண்ணையில் நடைபெற இருக்கிறது.

கனஜீவாமிர்தம், ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் போன்ற வளர்ச்சியூக்கிகள், செயலூக்கிகள் மற்றும் பூச்சிவிரட்டிகள் போன்ற 12 வகையான இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இது நடைபெறுகிறது.

முன்பதிவுக்கு: 9442590077

குறிப்பு: உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான செலவுகளை தோராயமாக ஒரு நபருக்கு ரூ.300 என்ற வீதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

விளம்பர பகுதி

வியாழன், 10 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon