மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

போலீஸுக்கு பேன் பார்க்கும் குரங்கு: வீடியோ!

போலீஸுக்கு பேன் பார்க்கும் குரங்கு: வீடியோ!

எப்போதும் கைது, விசாரணை, பதற்றம் என பரபரப்பாக இருக்கும் காவல்நிலையத்தில் ஒரு விநோத சம்பவம் நடைபெற்றுள்ளது. இது காண்பவரை ரசிக்க வைக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியின் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் காவலர் ஸ்ரீகாந்த திவேதி. இவர் காவல் நிலையத்தில் அமர்ந்து முக்கியமான சில கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது காவல் நிலையத்துக்குள் வந்த குரங்கு ஒன்று ஸ்ரீகாந்த திவேதியை பார்த்து என்ன நினைத்ததோ தெரியவில்லை.

உடனடியாக அவரது தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டது. அதுமட்டுமின்றி அவரது தலையில் பேன் பார்த்திருக்கிறது. அந்த அதிகாரிக்கு எந்த வித இடையூறும் இன்றி அந்த சுட்டிக்குரங்கு இந்த வேலையை பார்த்துள்ளது. இதனால் அதிகாரியும் வழக்கம் போல் கோப்புகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனை காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ராகுல் ஸ்ரீவத்சவா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். வீடியோவைக் காணும் சிலர் குரங்கும் அதிகாரியும் எதையோ மும்முரமாகத் தேடுகின்றனர் என்று நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon