மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 டிச 2019

அமைச்சர் சண்முகத்துக்கு ஓபிஎஸ் ஆறுதல்!

அமைச்சர்  சண்முகத்துக்கு ஓபிஎஸ் ஆறுதல்!

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தங்கை வள்ளியின் மகன் லோகேஷ் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். லோகேஷின் தற்கொலை அவரது குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியது. லோகேஷை தனது சொந்த மகன் போல் வளர்த்து வந்த அமைச்சருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், மாவட்ட அதிமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் என திமுக புள்ளிகளும் அமைச்சர் சண்முகம் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தனர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் அவரை நேரில் பார்த்து ஆறுதல் கூறவில்லை. இதனால் அவர் கோபத்தில் இருப்பதாக அமைச்சரின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நமது மின்னம்பலத்தில், துக்கத்துக்கு வராத இபிஎஸ், ஓபிஎஸ்: கோபத்தில் சிவி சண்முகம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று (அக்டோபர் 9) துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் உள்ள அமைச்சர் சண்முகம் வீட்டுக்குச் சென்ற துணை முதல்வர், லோகேஷின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சண்முகம் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon