மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

சாதியியல் நோபல் பரிசு தமிழ்நாட்டுக்கே! : அப்டேட் குமாரு

சாதியியல் நோபல் பரிசு தமிழ்நாட்டுக்கே! : அப்டேட் குமாரு

இன்னைக்கு மத்தியானம் சரியான சாப்பாடு. வாழ இலைய போட்டு, நடுவாக்கில சாதத்த வச்சு, அதுக்கு மேல சுடச்சுட சாம்பார ஊத்தி அப்பளம், பொரியல், கூடவே காரமா மிளகு ரசம். அடடா! இப்படி ரசிச்சு ருசிச்சு சாப்பிடுறதும் ஒரு சுகம்தாங்க. இந்த புரட்டாசி வந்ததில இப்படியும் சில நன்மைகள் இருக்கத்தாங்க செய்யுது. திருப்தியா சாப்பிட்டு அப்டியே பொது அறிவ வளத்துக்கலாம்னு டிவில நியூஸ் சேனல ஆன்பன்னா, பீதிய கெளப்புற பீஜிஎம் போட்டு பிரேக்கிங் நியூஸ போடுறாய்ங்க. அப்படி என்னய்யா பெரிய செய்தின்னு உத்துப்பாத்தா, வேதியியலில் நோபல் பரிசாம். அட எப்படியும் நம்ம ஊர்க்காரங்க எவனும் வாங்க போறது இல்ல. வெளியூர் காரன் சாதன பண்ணத நம்ம ஆளுங்க பிரேக்கிங்ல போடுறாய்ங்க. ஒருவேள நோபல் லிஸ்ட்ல ‘சாதியியல்’னு ஒரு கேட்டகரி மட்டும் இருந்துச்சுன்னு வச்சுக்கங்க, பூரா பரிசையும் நம்ம ஆளுங்களே அள்ளிட்டு வந்திருப்பாய்ங்க. என்னத்த சொல்றத. நாம் போய் ஒரு குட்டி தூக்கத்த போட்டிட்டு வறேன். சாப்பிட்ட மயக்கத்தில கண்ணு சொக்குது. நீங்க போய் அப்டேட்ட படிங்க.

ச.ரா.எதார்த்தமானவள்

மழை நீரை தாங்கிடும்

சிறு புல்லின் நுனி போல..

நம் கண்ணீரை தாங்கிடும்

ஓர் உறவினை பெற்றிட வேண்டும்..

Pachai Perumal.A.

“45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 3 ஆண்டுகளில் படுமோசம்” : பா.ஜ.க ஆட்சியில் வேலையின்மை அதிகரிப்பு!

வெள்ளிக்கிழமை இரண்டு எலுமிச்சை பழத்தை முச்சந்தியில் வீசினா வேலைவாய்ப்பு அதிகரிச்சிரும்யா.

அரஸ்

இரக்கமற்றவர்களின் முகவரி வேண்டுமா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம் போய் கேளுங்கள் நிறைய கிடைக்கும்..

நட்சத்திரா

மனம் சோர்வடையும் போது ப்யூஸ் போன பல்ப்பாகவும் , சந்தோசமாக இருக்கும் போது LED லைட்டாகவும் தானாகவே மாறுகிறது முகம்

பாலசுப்ரமணி

என்னங்க உங்க "அம்மாவை" சாப்பிட வரச்சொல்லுங்க : இது சாதாரண நாட்களில் மனைவியின் அழைப்பு

என்னங்க "அத்தைய" சாப்பிட வரச் சொல்லுங்க : இது மனைவியின் உறவினர்கள் வீட்டில் இருக்கும் போது மனைவியின் அழைப்பு

சோலை ராஜா

பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்...

பாதங்களை அடிக்கடி கழுவ வேண்டிய அவசியம் இருக்காது....

mohanram.ko

ஆறு எலுமிச்சையின் சக்தி இருக்கிற 'விம் பாரை' டயருக்கு அடியில வைக்க கூடாதா னு கேட்கிறான்

நட்சத்திரா

திருமண வாழ்க்கை...

Expectation :

துணி காயப்போடும்

என்னை ரசிக்கும்

உன் பார்வையால்

குடைசாய்கிறது மனது

Reality :

அதான் துணிய காயப்போடுறேனு தெரிதுல...பெறகென்ன பார்வை.. போய் குக்கர் அடுப்ப ஆஃப் பண்ணுங்க

தேடல்

நிறைவான செல்வ வளம் என்பது மற்றவர்களை விட அதிகமாக செல்வத்தை சேர்ப்பதல்ல...,

போதுமென்ற நிறைவான மனதை கொண்டிருப்பதே ஆகும்...!

mahi

"நீ தான் டி எல்லாம்"

என்பதில் தொடங்கி.....

"உன்னால் தான் டி எல்லாம்"

என்பதில் முடிவடைகிறது..... இன்றைய "காதல்"

முகமூடி

அம்மாவை நினைவுபடுத்தும்படி

சிலரால் சமைத்திட முடியும்..!!

ஆனால் அம்மாவை மறக்க

வைக்கும்படி யாராலும்

சமைக்க முடியாது..!!

தனி ஒருவன்

உங்களுக்கு நீங்களே சவால் செய்யாவிட்டால், நீங்கள் என்ன ஆக முடியும் என்பதை நீங்கள் ஒருபோதும் உணர மாட்டீர்கள்

தமிழ்

முன்ன எல்லாம் பனை சட்டியில சமைச்சோம்...

குழந்தைங்க அம்மா அப்பாவோட ஒட்டி இருந்தாங்க...

அண்ணன் தம்பி ஒட்டி இருந்தாங்க...

தாத்தா பாட்டி ஒட்டி இருந்தாங்க...

இப்போது

எல்லாமே Non Stick தான்...

ஆமா.. உறவுகளும் இப்போ Non Stick தான்...

யாரும் யாரோடையும் ஓட்டுறது இல்ல

SHIVA SWAMY.P

நமக்கெல்லாம் சின்ன வயசுல உடம்பு சரியில்லாம போனால்,

கொஞ்சநேரம் தூங்கினா சரியா போய்டும்ன்னு அம்மா சொல்லும்,

இப்பத்த குழந்தைகள் என்ன நோய்க்கு என்ன மருந்துன்னு கூகுள்ல தேடி சொல்லுதுங்க..

ரஹீம் கஸ்ஸாலி

அபார்ட்மெண்டில் வசிக்கும் நகர வாசிகளுக்கு, தன் அபார்ட்மெண்டில் அடுத்த வீட்டில் இருப்பவர் பெயரைவிட, அவர் வைத்திருக்கும் காரின் பெயர் கரெக்டாக தெரியும்.

-லாக் ஆஃப்

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon