சுட்ட கதை வேணுமா? சுடாத கதை வேணுமா? :அப்டேட் குமாரு

public

அட்லீ மத்த டைரக்டர்ஸோட கதையை உருவி, வேற மாதிரி மாத்தி படம் எடுக்குறாருன்னு ஃபிரெண்டு ஒருத்தன் கலாய்ச்சிக்கிட்டே இருப்பான். ரீசண்டா ரிலீஸான பிகில் பட போஸ்டரை அனுப்பி, ‘எப்படி என் தலைவன் அட்லீயோட ராஜ தந்திரம்?’னு கேட்டா, ஆங்க்ரி எமோஜி போடுறான். இப்ப என்ன பண்ணிட்டாப்ல என் தலைவன். இதுவரைக்கும் மத்த டைரக்டர் கதைல இருந்து உருவுனாப்ல. இப்ப, அவர் படமான ராஜா ராணில இருந்தே சுட்டுருக்காப்ல. இதெல்லாம் பெரிய விசயம்னு டென்சனாகி சொந்தமா கதை எழுதுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமான்னு கேட்டான். நான் உடனே ஒரு கதையை எடுத்து உட்டேன். ‘ஒரு மாடு ஒன்னு ரெட் சிக்னல் பாத்துட்டு நிக்குது. கொஞ்ச நேரம் கழிச்சு கிரீன் சிக்னல் போட்டதும் அது ரோட்டை கிராஸ் பண்ணி போகுது. கட் பண்ணா சாலை விதிகளை மதிப்பீர்னு எண்ட் கார்டு போட்றோம்’ அப்டின்னு சொன்னேன். ஒரு நிமிசத்துல திரும்ப ஆன்லைன் வந்தவன், டிவிட்டர்ல இருந்து பிரீத்தி ஜிந்தா வீடியோவை எடுத்தாந்து காட்றான். இந்த இண்டர்நெட் வந்ததுல இருந்து இவனுகளையெல்லாம் ஏமாத்தவே முடியுறது இல்லை. நீங்க போய் அந்த வீடியோவை பாத்துட்டு அப்டேட்டைப் படிங்க. நான் இன்னொரு கதை எழுதிட்டு வர்றேன். ஹலோ, மிஸ்டர் சந்திரமௌலீ….

**சிலந்தி**

திங்கட்கிழமை லீவு முடிந்தாலும், செவ்வாயும் திங்கள் போல் தோன்றுவது எந்தவித மனநோயோ..??!!

**பழைய சோறு**

செல்போனில் சார்ஜ் உள்ளவரை கரண்ட் போனதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தான் இருக்கிறோம்..!

**அழகிய கவிதை**

பட்டாடை உடுத்திக்கொள்ளும் பொய்களின் நடுவில் உண்மையின் கிழிந்த ஆடைகள் அசிங்கமாகவே தெரியும்

**முகமூடி**

“சாப்டியாப்பா” என்பது

அம்மாவின் பாசமென்றால்,

“சாபிட்டானான்னு” கேளு என்பது

அப்பாவின் பாசம்..!

**ℳsd இதயவன்**

“சினிமாவிலிருந்து தனக்கான தலைவரை தேர்ந்தெடுப்பதை தமிழ்ச் சமூகம் நிறுத்த வேண்டும் – சீமான்#

உங்களையும் சேர்த்து தானே அண்ணே என்ன ஒரு பெருந்தன்மை ?

**செங்காந்தள்**

பிரைவேட் ஹாஸ்பிட்டல் என்றும், கவர்மெண்ட் ஆஸ்பத்திரி என்றும் உச்சரிப்பிலும் வேறுபாடு…!!!

**மித்ரன்**

என்னுடைய புத்தகம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கையில் இருக்கும் என்று நினைக்கிறேன்; நான் எண்ணிய திட்டங்களை அவர் அங்கு நிறைவேற்றி வருகிறார்! – சீமான்

விட்டா தன்னோட ஆன்மா தான் ஜெகன் உடம்பில் புகுந்து ஆட்சி செய்யுதுனு சொல்லுவாப்ல போல..?!

**ரமேஷ்.ஏ**

பொரியில் ஒழிந்திருக்கும் பொட்டுக்கடலையை தேடுவது போல்…,

என்னுள் ஒழிந்திருக்கும் உன்னை தேடுகிறேன் அன்பே.

**ஜோக்கர்**

ஹெல்மெட் போடலன்னு விரட்டி விரட்டி பிடிச்சு பைன் போடுறாங்க. நல்லது.

கொஞ்சநாள் முன்னாடி “பிளாஸ்டிக்கு தடை”.ஆனா இன்னும் பரவலாக பிளாஸ்டிக் நடமாட்டம் இருக்கு.

அதாவது தனிநபர் மேல ஈஸியா பாயுற சட்டம், ஒரு நிறுவனம், வியாபார ஸ்தாபகம்னா பின் வாங்குது.

**SHIVA SWAMY.P**

மனிதன் கஷ்டப்படாமல் எளிதாக கற்றுக்கொள்வது தூங்குவதற்கு மட்டும்தான்.

**м υ я υ g α η . м**

பல தடைகளை நீ தாண்டி

சென்றால் மட்டுமே

உன் வாழ்வில்

சரித்திரங்கள் பல படைக்க முடியும்..!

**ராஸ்கல்**

திடீரென ஒருவர் தன் சிறிய

தவறுகளை உங்களிடம்

அம்பலப்படுத்துகிறார் என்றால்

ஏதோ ஒரு பெரிய தவறை

உங்கள் பார்வையில் இருந்து

அப்புறப்படுத்துவதற்காக கூட இருக்கலாம்

**செந்திலின்_கிறுக்கல்கள்**

ஏழைகளின் பார்வையில் இறைவன் ஆகிறார்

“விவசாயி”!

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *