மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

குற்றவாளிகள் போல நடத்துகிறார்கள்: டிஜிட்டல் பேனர் அச்சக சங்கம்!

குற்றவாளிகள் போல நடத்துகிறார்கள்: டிஜிட்டல் பேனர் அச்சக சங்கம்!

காவல் துறையினர் தங்களை குற்றவாளிகள் போல நடத்துவதாக டிஜிட்டல் பேனர் அச்சக சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் தொடர்புடையதாகக் கூறி சுபஸ்ரீ மீது ஏறிய தண்ணீர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அந்த பேனரை அச்சடித்த அச்சகத்துக்கும் சீல் வைத்துவிட்டனர். ஆனால் இதுவரை விபத்துக்குக் காரணமாக இருந்த பேனரை வைத்த அதிமுக பிரமுகர் ஜெயபால் மட்டும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சக சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் கிண்டியில் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் சுரேஷ், “எங்களது வேலையே பிரிண்டிங் செய்வது மட்டும்தான். அதனை கட்டுவது எங்களது வேலையல்ல. அதற்காக தனியாக தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அந்த தொழிலாளர்கள் செய்யும் சிறு தவறினால் எங்களுடைய ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

சுபஸ்ரீயின் மரணத்திற்கு எள்ளளவும் தாங்கள் காரணமல்ல என்று குறிப்பிட்ட சுரேஷ், “காவல்துறை அதிகாரிகள் எங்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவதும், மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றும் தெரிவித்தார். விஜய், கமல் போன்ற நடிகர்கள் தங்களுக்கு ஆதரவாக பேசுவது ஆறுதலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 22 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon