மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

விக்கிரவாண்டி: தொகுதிக்குள் ‘இறங்கியது’ அதிமுக பணம்!

விக்கிரவாண்டி:  தொகுதிக்குள் ‘இறங்கியது’ அதிமுக பணம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், அதிமுக விக்கிரவாண்டியில் தேர்தல் பணிகளுக்காக களமிறங்கிவிட்டது.

தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. காலமானபோதே தொகுதியின் அதிமுக நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், ‘எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம், சந்திக்கத் தயாராக இருங்கள்’ என்று கூறினார். அதிமுக சார்பில் அமைச்சர் சண்முகத்தின் அண்ணனே கூட வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று இப்போது வரையும் பேச்சிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஓரிரு தினங்களில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அத்தனை பூத்களுக்கும் அதிமுகவில் தலா 20 ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக அதிமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள். இந்தத் தொகை என்பது பூத் அளவில் கூட்டங்கள் போடுவது, சுவர்களுக்கு வெள்ளையடிப்பது போன்ற ஆயத்தப் பணிகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விக்கிரவாண்டியில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று அறிந்துகொண்டு அதிமுக தனது பணிகளை கமுக்கமாக தொடங்கிவிட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

திமுக சார்பில் இதுவரை எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் அதிமுகவினர் மத்தியில் பூத் கமிட்டி பணம் இறங்கியிருப்பது அவர்களிடத்தில் உற்சாகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon