மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 27 பிப் 2020

சவுதியில் மீண்டும் தாக்குதல்:கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

சவுதியில் மீண்டும் தாக்குதல்:கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

சவுதி அரேபியா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை(செப்டம்பர் 14) ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்,சவூதி அரேபியா மீதான அவர்களின் இலக்குகள் ‘தொடர்ந்து விரிவடையும்’ என்று நேற்று மாலை எச்சரித்தன.

தாக்குதல் நடத்திய தினமே ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இதற்கு பொறுப்பேற்றிருந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ எந்த ஆதாரமும் அளிக்காமல், ஈரான் இந்தத் தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாக விரைவாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் ஈரானால் நிராகரிக்கப்பட்டன.

அதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை ரியாத் முடித்த பின்னர் சாத்தியமான இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என சூசகமாக தெரிவித்தார். ஈரான் தான் தாக்குதலுக்கு பொறுப்பு என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கும் வரை அமெரிக்கா பதிலடி கொடுக்க விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகையில் டிரம்ப் கூறினார். அதே சமயம், நேற்று(செப்டம்பர் 16) ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப், தாக்குதல்களுக்கு பதிலளிக்க வேண்டுமானால் அமெரிக்கா தயாராக உள்ளது எனக் கூறினார்.

இத்தாக்குதலைக் கண்டித்த ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், “தேவைப்பட்டால் சவூதி அரேபியாவுக்கு உதவ ரஷ்யா தயாராக உள்ளது” எனக் கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் துருக்கி மற்றும் ஈரான் தலைவர்களுடன் அங்காராவில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ரஷ்ய ஆயுதங்களை வாங்க முன்மொழிந்திருக்கிறார்.

சவுதி அரேபிய எண்ணெய் ஆலையில் நடந்த தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 15 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், நேற்று(செப்டம்பர் 16) மாலை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், மேலும் வான்வழித் தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "எங்களது நீண்ட கைகள் நாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என சவுதி அரசுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம்" எனக் கூறியுள்ளது.

ஏமனின் கிளர்ச்சியாளர்களின் இந்த மிரட்டலால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 17 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon