மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 23 பிப் 2020

நன்றி சொன்ன நயன்தாரா

நன்றி சொன்ன நயன்தாரா

நடிகை நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து தயாராக உள்ள 65 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற நெற்றிக்கண் படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிலிண்ட் ராவ் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்டம்பர் 15) தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ள 65ஆவது படத்தை ரவுடி பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பது யார் என்பது இதுவரை கூறப்படவில்லை என்றாலும் நயன்தாராவின் ’பாய் ஃபிரண்ட்’என்று சொல்லப்படுகிற விக்னேஷ் சிவன் பெயரில் நயன்தாரா நிதி உதவியுடன் இப்படம் தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்விருவருக்கும் நானும் ரவுடி தான் பட சமயத்தில் தான் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுக்கு பொதுவாகவே, படப்பிடிப்பு முடிந்து, வேலை செய்த அத்தனை பேருக்கும் உதவி செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். சமீபத்தில் நயன்தாரா, தனது முன்னாள் மேனேஜருக்கு கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இப்போது விக்னேஷ் சிவனின் மேனேஜரான கே. எஸ். மயில் வாகனன் என்பவரை இணைத் தயாரிப்பாளராக மாற்றியிருக்கிறார்.

நயன்தாரா நெற்றிக்கண் பட அறிவிப்பை வெளியிட்ட கையோடு, சூப்பர் ஸ்டார் நடித்த படத்தின் பெயரைக் கொடுத்ததற்காக ரஜினிகாந்த் மற்றும் நெற்றிக்கண் படத்தை தயாரித்த கவிதாலயா நிறுவனத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 15 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon