மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

நடுத்தர மக்களின் நம்பிக்கை நாயகன் `ஶ்ரீ தக்‌ஷா’

 நடுத்தர மக்களின் நம்பிக்கை நாயகன் `ஶ்ரீ தக்‌ஷா’

மிகப் பெரிய தொழில்நகரம், ஜவுளித் துறை, ஐ.டி என பலதரப்பட்ட தொழில்கள், மரியாதையான மக்கள், மிகச் சிறந்த தட்பவெட்ப நிலை, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், சுகமான தென்றல் காற்று, சுவையான சிறுவாணி தண்ணீர், கேரளம், கர்நாடகாவை இணைக்கும் வகையில் சாலை, ரயில் போக்குவரத்து வசதி, பல்வேறு நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தை அளிக்கும் சர்வதேச விமான நிலையம் என கோயம்புத்தூருக்கு ஏகப்பட்ட ப்ளஸ்கள்.

அந்த ப்ளஸ்களில் இன்னொரு ப்ளஸ், கோவையில் வாழ்கிற மக்களுக்கும், வருகிற மக்களுக்கும் வசதியான வீடுகளைக் கட்டித்தரும் `ஶ்ரீ தக்‌ஷா’ (Sree Daksha Property Developers (India) Pvt Ltd) கட்டுமானத் துறையினர்.

எந்தவொரு வெற்றியும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. அவ்வாறு கிடைத்தாலும் அது நிலைக்காது. கட்டுமானத் துறை என்பது அனைவராலும் அவ்வளவு எளிதாகச் செய்யக்கூடிய துறையல்ல. அதில் இருக்கும் சுழல்களையும், சூழ்நிலைகளையும், சூட்சமங்களையும், போட்டிகளையும் தெளிவுற அறிந்தால் மட்டுமே ஒருவர் வெற்றி பெறமுடியும். அப்படிப்பட்ட வெற்றியை அடைந்து வீறுநடை போடுகிறது `ஶ்ரீ தக்‌ஷா’.

``பிழைக்க வந்த இடத்தில் என்னை ஆதரிச்சு, அரவணைத்துக்கொண்ட ஊர் கோயம்புத்தூர். நான் சந்திச்ச பெரும்பாலானோர் நடுத்தர மக்கள்தான். அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைத்தேன். என்னோட இணைந்த மற்ற டைரக்டர்களோட செய்துட்டு இருக்கேன். அவ்வளவுதான்” என்கிறார் ஶ்ரீ தக்‌ஷாவின் மானேஜிங் டைரக்டர் மோகன்.

சாமான்யர்களின் தேவைகளை நுட்பமாக அறிந்து, அவர்கள் தேவைக்கேற்றாற்போல் வடிவமைத்து, அவர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் அளித்து, அவர்கள் நம்பிக்கையை பெறுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

இந்தக் கடினமான செயலை செவ்வனவே செய்து கொண்டிருப்பதன் நேரடி சாட்சிதான், தற்போது கோவை, வடவள்ளியில் தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில், அதிநவீன 31 தனி வீடுகளைக்கட்ட உத்தேசித்து முறைப்படி பூமி பூஜை செய்து மத்திய மாநில அரசின் அனைத்து அனுமதிகளையும் முறையாகப் பெற்று, TN RERA-வின் அனுமதியையும் பெற்று “SREE DAKSHA’S TYAKTA” என்ற பெயரில் தொடங்கியுள்ளது Sree Daksha Property Developers (India) Pvt Ltd.

நடுத்தர மக்களின் நம்பிக்கை நாயகனான `ஶ்ரீ தக்‌ஷா’வின் அடுத்த ப்ளஸ் இந்த TYAKTA என்றே கூறலாம்.

விளம்பர பகுதி

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon