மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 செப் 2019

இலங்கை பிரதமரிடம் கனிமொழி பேசியது என்ன?

இலங்கை பிரதமரிடம் கனிமொழி பேசியது என்ன?

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதித்தார்.

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ராஃப் ஹக்கீம் மகளின் திருமணம் நேற்று முன்தினம் கொழும்புவில் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்பதற்காக திமுக மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி தனிப்பட்ட பயணமாக இலங்கை சென்றிருந்தார். அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று (செப்டம்பர் 13) அவரைச் சந்தித்த கனிமொழி, மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தினார். இச்சந்திப்பின்போது, தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கழக நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழி, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே - இலங்கை மீன்வளத்துறை இணை அமைச்சர் திலிப் வெதார்ச்சி ஆகியோரை நேரில் சந்தித்து, இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தி இந்து ஆங்கில ஊடகத்திடம் பேசிய கனிமொழி, “இலங்கையில் போருக்கு பிந்தைய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பேசினோம். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்து கேட்டறிந்தோம். முக்கியமாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் பேசினேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் இந்த பிரச்சினை குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன் என உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

சனி 14 செப் 2019