மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 செப் 2019

சவுதி: உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலை மீது தாக்குதல்!

சவுதி: உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலை மீது தாக்குதல்!

சவுதி அரேபியாவின் இரு மிகப்பெரிய கச்சா எண்ணெய்த் தொழிற்சாலை மீது இன்று (செப்டம்பர் 14) ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்பதால் உலகம் முழுதும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவில் புக்கியாக் நகரில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, குஹரிஸ் எண்ணெய் வயலில் இன்று காலை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணெய் ஆலை பற்றி எரிகிறது.

“இந்த தாக்குதலில் எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்றோ, உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்றோ இதுவரை தகவல் இல்லை. ஆனால் புக்கியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியபோது துப்பாக்கிச் சூடு சத்தங்களும் கேட்கின்றன. அந்த வட்டாரம் முழுதுமே கரும்புகை வானம் வரை சூழ்ந்துள்ளதால் எதையுமே துல்லியமாக உடனடியாக சொல்ல முடியவில்லை” என்று சவுதி நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் பத்திரிகை குறிப்பு கூறுகிறது.

புக்கியாக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைதான் உலகத்திலேயே மிக அதிக அளவு கச்சாய் எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை. ஒரு நாளைக்கு ஏழு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இங்கே சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதைக் குறிவைத்து ஏற்கனவே அல்கொய்தா, அன்சாருல்லா பயங்கரவாதிகள் இயக்கம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் இப்போதைய தாக்குதலை நடத்தியது யார் என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த இரண்டு நாட்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் விளைவாக கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருக்கும் என்றும் வர்த்தக வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

சனி 14 செப் 2019