மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 செப் 2019

ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு!

ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு!

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாநில வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி அளிக்கப்படுகிறது. கட்டாய தேர்ச்சியினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்திலும் சில மற்றங்களை மத்திய அரசு அவ்வப்போது மேற்கொண்டு வந்தது.

அதன்படி, இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவும் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வாகாத மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிட்ட நாளில் இருந்து இரண்டு மாத காலத்துக்குள் மறு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிலேயே படிக்க வேண்டும். தேர்ச்சி அடையாத மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்ற பள்ளிகளுக்கு உரிமையில்லை. அதேபோன்று கட்டாய கல்வி சட்டத்தின்படி 5ஆம் வகுப்புக்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு கட்டாயத்தேர்ச்சி உண்டு”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழக அரசு மற்றொரு ஆணையை பிறப்பித்துள்ளது. இதுவரை பத்தாம் வகுப்பு மாணவர்கள் மொழி பாடங்களில் முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தேர்வுகள் எழுதி வந்த நிலையில், இனி அவை ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது 2019-2020ஆம் கல்வியாண்டு முதல் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு இரண்டு தாள்களாக தேர்வு எழுதும் முறை ரத்து செய்யப்பட்டு இனி ஒரே தாளாக தேர்வு நடைபெறும். இதன் மூலம் மொழி பாட ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்வின் போதும் விடைத்தாள் மதிப்பீட்டுக்காக அதிகநாட்கள் செலவிடும் நிலைமாறி

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

சனி 14 செப் 2019