மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 31 மா 2020

வெளிநாட்டு பத்திரிகையாளர்களை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.

வெளிநாட்டு பத்திரிகையாளர்களை குறிவைக்கும்   ஆர்.எஸ்.எஸ்.

ஜம்மு காஷ்மீர், பசுப் பாதுகாப்பு, கும்பல் தாக்குதல் என இந்தியாவை மையப்படுத்தி சமீப ஆண்டுகளாக வெளிநாட்டு ஊடகங்களில் நிறைய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ். சின் பங்கு பற்றியும் வெளிநாட்டு ஊடகங்கள் விவாதிக்கின்றன.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு என ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருப்பதாகவும், அது செப்டம்பர் 24 ஆம் தேதி நடக்கலாம் என்றும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

ஆர்.எஸ். எஸ், இயக்கத்தின் சார்பில் அதன் கொள்கை விளக்க சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற்றபோதும், அதில் இந்திய மீடியாக்கள் கலந்துகொண்ட அளவுக்கு அழைப்பு விடுத்தும் சர்வதேச மீடியாக்கள் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் மத்திய அரசின் முக்கிய முடிவுகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கு பற்றியும் அமைப்பு பற்றியும் சர்வதேச மீடியாக்கள் அதிகமாக எழுதி வருகின்றன. இது உலக அளவில் ஆர்.எஸ்.எஸ். மீது தவறான புரிதலை ஏற்படுத்திவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் சர்வதேச மீடியாக்களை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி சந்திக்க முடிவு செய்திருக்கிறார் மோகன் பகவத். ஏற்கனவே வெளிநாட்டு தூதர்களை சந்தித்து மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ். பற்றியும் அதன் கொள்கைகள் பற்றியும் விளக்கியிருக்கிறார்.அதன் அடுத்த கட்டமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் சங்க வட்டாரத்தில்.

செப்டம்பர் 21 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் செல்லும் நிலையில் ஆர்.எஸ்.எஸ்.சின் இந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் முகாம் நடத்தப்படுவது கவனிக்கத் தக்கது.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon