மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

அனிமல் க்ளியரன்ஸுக்கு 3 லட்சம் லஞ்சம்!

அனிமல் க்ளியரன்ஸுக்கு 3 லட்சம் லஞ்சம்!

‘திரைப்படங்களுக்கு அனிமல் க்ளியரன்ஸ் சர்டிஃபிகேட் வாங்க 3 லட்சம் வரை லஞ்சம் தர வேண்டியது இருக்கிறது’ என தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியிருக்கிறார். ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் விலங்குகள், எவ்விதத்திலும் துன்புறுத்தப்படவில்லை என்பதை, சென்சார் வாங்குவதற்கு முன்பு சான்றிதழ் பெற்று உறுதி செய்யவேண்டும். சென்சார் சர்டிஃபிகேட் வாங்கியபிறகே படத்தை ரிலீஸ் செய்யமுடியும் என்பதால், அனிமல் க்ளியரன்ஸ் சர்டிஃபிகேட்டும் இங்கு முக்கியமானதாகிறது.

ஜெமினி சினிமாஸ் ராகவா மற்றும் GEMS பிக்சர்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம் ஆண்கள் ஜாக்கிரதை. K.S முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:

ஆண்கள் ஜாக்கிரதை. எப்போதுமே ஆண்கள் ஜாக்கிரதையாகத் தான் இருக்கணும். ஏன்னா இப்போ மீடூ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத் தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு படமெடுத்துள்ளார். இப்போது நடிகர்களை வைத்து படமெடுப்பதே கஷ்டம். இவர்கள் முதலையை வைத்து சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். டிரெய்லரே நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக நல்லாருக்கும். குறிப்பாக இசை நன்றாக இருந்தது. அதனால் இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை.

படப்பிடிப்பு நடைபெறும் போது குறுக்கே நாய் வந்தால் கூட இப்போது சென்சார் சான்றிதழ் பெறுவதில் பிரச்சனை வருகிறது. மோடி அரசு நல்லா போகுறதா சொல்றாங்க. ஆனால், தணிக்கை சான்றிதழ் பெற அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு சென்சாரில் லஞ்சம் இருக்கு. போனமாசம் கூட ஒரு படத்திற்கு மூன்று லட்சம் வாங்கினார்கள். அனிமல் வெல்ஃபர் பிரச்சனையை சரி செய்வது படம் எடுப்பதை விட கஷ்டமாக இருக்கிறது.

ஆன்லைன் டிக்கெட் விசயத்தை நிர்மலா சீத்தாராமன் சரி செய்கிறேன் என்று சொன்னார். அதை இப்போது நமது தமிழக அரசு செய்துள்ளது. ஆன்லைன் மூலமாக வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும். இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை மனதில் வைத்து படமெடுக்க வேண்டும். ஒரு ஹீரோவை வைத்து படமெடுத்தால் எவ்வளவு வியாபாரமாகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon