மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

இனி மொழிச் சண்டை மைதானம் என்பீர்களாக! :அப்டேட் குமாரு

இனி மொழிச் சண்டை மைதானம் என்பீர்களாக! :அப்டேட் குமாரு

இந்தியை நாடு முழுக்க ஒரே மொழியா கொண்டு போகணும்னு அமித்ஷா சொன்னதால, எங்க வட்டத்துல ஏதோ அவசர மீட்டிங்காம். அதிமுக ஆள் ஒருத்தரும், பா.ஜ.க ஆள் ஒருத்தரும் போய்ட்ருந்தப்ப எதிர்ல பாத்தேன். என்ன ஆறுமுகமண்ணே, வெள்ளையுஞ்சொல்லையுமா எங்க கிளம்பிட்டீருன்னு கேட்டேன். விஷயத்தை சொன்னதும், அங்க ஏதாவது புது ஐடியா கேட்டா என்னண்ணே பண்ணுவீங்க கைவசம் ஏதும் இருக்கான்னு கேட்டா முழிச்சாங்க. சரி, ஒரு டீ சொல்லிட்டு வா நான் ஐடியா குடுக்குறேன்னு உக்காந்ததும், “இந்தா பாருண்ணே உன் கட்சியும் பாஜகவும் கொஞ்சம் சமரசமா இருக்காங்க. அதனால, அவங்களை எதிர்க்காம, ஆனா தமிழ்நாட்டு மக்கள்ட்ட பேச்சு வாங்காம ஒரு ஐடியா சொல்லணும்னா ‘ஸ்கூல் பாடபுத்தகத்தோட மெயின் அட்டைல இந்திலயும், உள்ள பூராம் தமிழ்லயும் எழுதிடலாம்’ அப்டின்னு சொல்லுங்க. உங்களை அமைச்சரா ஆக்கிபுடுவாங்க’ன்னு சொல்லிட்டு திரும்புனா, பா.ஜ.க-காரரான வெள்ளச்சாமி ஆர்வமா உக்காந்திட்ருந்தாப்ல. “உனக்கு ரொம்ப ஈசிண்ணே, எச்.ராஜா அண்ணனை கூப்பிட்டு, மோடியோட எல்லா இந்தி பேச்சையும் தமிழ்ல டிரான்ஸ்லேட் பண்ணி எல்லா டிவி சேனல்லையும் போட்றலாம்’னு சொல்லிடுண்ணே. விஷயம் தெரிஞ்ச உடனே தமிழ்நாட்ல இருக்க அம்புட்டு பயலும் இந்தியவே ஏத்துக்குறோம்னு சொல்லிருவாய்ங்க அப்டின்னு சொல்லிட்டு வந்துட்டேன். இவங்க என்ன சொல்லப் போறாய்ங்களோ, அதை அவங்க என்ன பண்ணப் போறாய்ங்களோ! நீங்க அப்டேட்டைப் படிங்க, நான் போய் என் அக்கா புள்ளைய பப்ளிக் எக்சாம்கு ரெடி பண்ணிட்டு வர்றேன்.

mohanram.ko

என் ஓட்டலை ஏன்யா மூடறீங்க?

உங்க ஓட்டல்ல சாப்பிட்ட ரௌடிதான் தெம்பா குத்தி கொலை பண்ணி இருக்கான், அதனால நீங்க குற்றவாளி

தமிழ்ச்செல்விசௌந்தரராஜன்

ஒரு பெண் குளித்து விட்டு ஈரத்தலையுடன் புடவை கட்டி வரும் அழகை விடவா...

அவள் உடுத்தும் மாடர்ன் உடை தந்து விடப்போகிறது.

உள்ளூராட்டக்காரன்

அந்த பொண்ணு ஹெல்மெட் போடலேன்னு ஒரு எதிர் வாதம்

அப்போ ஹெல்மெட் போட்டு கை, கால் உடைஞ்சா பேனர் வச்சிக்கிட்டே இருக்கலாம்...?!

நானும் ரவுடி தான்.....

பேனர்களுக்கு எதிராக போராடியவரை ஜோக்கராக பார்த்த அதே சமூகம் இன்று பேனர் ஒழிப்பை பற்றி பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.

Niranjan kumar

ஒரே மொழியாக இந்தி இருந்தால், உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும்: அமித்ஷா

இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தொடங்கி எத்தைனையோ ஆளுமைகளுக்கு ஹிந்தி தெரியாது. இவர்களால் தான் இன்று நாடே பெருமை கொள்கிறது

இத்தனை ஆண்டுகள் இந்தியா அடையாளப்படுத்தப்படவில்லையா என்ன?

கோழியின் கிறுக்கல்!!

அந்த பொண்ணு அந்த வழியாக வந்ததினால் தான் அந்த விபத்து நடந்தது என்று அவரின் பெற்றோரை இன்னும் ஏன் கைது செய்யாமல் இருக்கிறார்கள்!?

ஜோக்கர்...

லோக்கல் பஸ்ஸில் "முக்கால் மணி நேரம்" ஆகும் தூரத்தை,

45 நிமிடத்தில் கடந்தால் அதை "பாஸ்ட் பஸ்" என்றறிக..!!!

SKP KARUNA

பத்து நாடுகளில் பேசப்பட்டும், எழுதப்பட்டும், தேசிய மொழியாகவும் கொண்டிருக்கும் தனிப்பெரும் தமிழ் மொழியின் முன் வெறும் பத்து மாநிலங்களில் பேசப்படும் ஒரு மொழியைக் கொண்டுவந்து கிலுகிலுப்பை ஆட்டிக் காட்டுறாங்க.

mohanram.ko

நில்

பேனரை கவனி

செல்

உள்ளூராட்டக்காரன்

பேனர்கள் வைக்கப்படும் பகுதி

மெதுவாக செல்லவும்

செந்திலின்_கிறுக்கல்கள்

நான் அழகா இருக்கேனா என கண்ணாடியை பார்த்து நண்பனிடம் கேட்டால் 90ஸ் கிட்ஸ்...ஸ்டேடஸில் வைத்து கேட்டால் 2k கிட்ஸ்!

கோழியின் கிறுக்கல்!!

நல்லா படிச்சவன் 'Out of Syllabus'னு சொல்ற கேள்விக்கு தான்,

நாம அதிக பக்கம் பதில் எழுதி இருப்போம்!!

ஜோக்கர்...

வேட்டி சட்டைன்னா "தாத்தா"

பேண்ட் சர்ட் என்றால் "மாமா"

டீ சர்ட் டவுசர் என்றால் "அண்ணன்"

குழந்தைகளின் "உடைசார்" குறியீடுகள்..!!!

எனக்கொரு டவுட்டு

"நான் இங்கே தான் இருக்கேன்,வந்திட்டு இருக்கேன்" என்று எவரொருவர் சரியான இடத்தை சொல்கிறாரோ அவர் அரிச்சந்திரனாய் வாழ்ந்து விடுகிறார் நம் மனதில்..!

ரமேஷ்.ஏ

வங்கிகளில் பணத்தை விட அதிக அளவில் கடனாக கைமாறுவது "பேனா"வே....!!!

சுபாஜி

Friend வீட்டு கேட்ல நாய்கள் ஜாக்கிரதை னு எழுதியிருந்து

ஆனா அவங்க வீட்டுல நாய் இல்லை

அவன்கிட்ட கேட்டேன் நாய்தான் இல்லையே அப்புறம் எதுக்கு எழுதி போட்டுருக்க

அதுவா மாப்புள அது வெளிய இருந்து வர்ர நாய்களுக்குனு சொல்லுரான்

இவன் யாரா சொல்லுரான்னு தெரியலையே

செந்திலின்_கிறுக்கல்கள்

பஸ்ஸுல பக்கத்துல இருக்குறவருக்கு போன் வந்தா நம்ப காது நம்மல கேட்காமலே அவர் பேசுவதை கேட்க போயிடுவது என்ன டிசைனோ!

மெத்த வீட்டான்

குழந்தைகளை இதை விட குரூரமாக தாக்க முடியாது

5 வது 8 வது வகுப்புகளில் பொதுத்தேர்வு !

ஜால்ரா காக்கா

இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

//உன் கிட்ட வீடு இருந்தா 8 வழி சாலைன்னு எடுத்துக்குவானுக

காடு இருந்தா ஹைட்ரோ கார்பன் மீத்தேன்னு எடுத்துக்குவானுக...

ஆனா உன் கிட்ட இருக்க மொழிய மட்டும் எவனாலும் எடுக்க முடியாது சிதம்பரம்

கருப்பு மன்னன்

கடைக்காரன் : அவன் பொண்டாட்டி ஒழுங்கா சமைக்காததுக்கும் , குழம்பு வைக்காததுக்கும் என்ன எதுக்கு தூக்கிப்போட்டு மிதிக்கிற

தட் கணவன் : உன் கடையிலதான் அரிசி , பருப்பு , காய்கறி வாங்குனாலாம்

கடைக்காரன் : பைத்தியமா டா நீங்க

ச ப் பா ணி

ஒவ்வொரு ஆடைகளும் நம் உடம்பில் பட்ட ஒரே குற்றத்திற்காக அடுத்த நாள்

"தூக்கில்" தொங்குகின்றன

நெல்லை க.சித்திக்

உலகமொழிகள் மூவாயிரத்துள், தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, தூய்மை, தாய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறு சிறப்புகளை ஒருங்கே உடையது. ஆதலால், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுமையிலும் பொதுமொழியாகும் தகுதியுடையது தமிழ்.

anbeSelva

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் இந்தி பேசும் மாநிலங்கள்தான் கல்வி சுகாதாரம் ஊட்டச்சத்து போன்ற சமூகநல குறியீடுகள் அத்தனையிலும் கடைசியில் இருக்கின்றன இத்தனை ஆண்டுகளாக ஹிந்தி சாதித்தது இதுதான்..

காட்டுப்பயல்

ஆங்கிலம் சரியா தெரியாத தாழ்வு மனப்பான்மை ஹிந்தி திணிப்பில் முடிகிறது.

Sonia Arunkumar

இங்கிலீஷ் கத்துக்கவே 30 வருசமாச்சு...இதுல ஹிந்தியாம். போங்கப்பூ

TTV Dhinakaran

இந்தியைவிட தொன்மையும், வளமும், ஆளுமையும் மிக்க தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிறைந்த தேசத்தில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மக்களிடம் வெறுப்பையே விதைக்கும்.

ராஜா ராசா

இந்தியால் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கமுடியும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா!

இதை சோவியத் யூனியன் கூறியது.

ரஷ்யமொழி ஆதிக்கம் எங்கள் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை பாதிக்கிறது என்ற புகைச்சல் 50 ஆண்டுகளாகவே இருந்தது.

அந்த இரும்புத்திரையே 14 துண்டுகளாக உடைந்தது

Cartoonist Bala

முதலில் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு 3 ம் வகுப்பு பாடத்தில் தேர்வு வைத்து அவரை தேர்ச்சி பெற சொல்லுங்கள்..

பின்னர் 5, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தட்டும்..

karthikeya sivasenap

எந்த மொழிவாரியான மாநிலம்,

இந்திய நாட்டிற்கு அதிகமான வருமானம் ஈட்டித்தருகின்றதோ, அம்மாநிலத்தின் மொழியை இந்திய நாட்டின் தேசிய மொழியாக்கினால் என்ன ??!!

-லாக் ஆஃப்.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon