மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

தமிழ் ஹீரோக்களை காப்பாற்றப் போவது யார்?

தமிழ் ஹீரோக்களை காப்பாற்றப் போவது யார்?

பிரிட்டிஷ் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி. இவரது வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்ம ரெட்டி என்கிற பெயரில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படமாக தயாராகி வருகிறது.

சிரஞ்சீவி அமிதாப் போன்ற நடிகர்களோடு விஜய்சேதுபதி நயன்தாரா தமன்னா ஆகியோரும் படத்தில் இருப்பதால் பாகுபலி 2 படத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இந்தபடம் உருவாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதனால் நேரடித் தமிழ்ப் படம் போலவே தமிழகத்தில் வெளியிட திட்டமிட்டுவருகின்றனர்.

இதனால் செப்டம்பர் 20 இல் வெளியாகும் காப்பான், செப்டம்பர் 27 இல் வெளியாகவிருக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களுக்கு சிக்கல் ஏற்படுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆந்திராவில் மார்க்கெட் இருக்கும் சூர்யாவுக்கு அங்கு பன்னிரண்டு நாட்கள் மட்டுமே நல்ல திரையரங்குகள் கிடைக்கும். தமிழகத்தில் நம்ம வீட்டுப் பிள்ளை வெளியாகி ஐந்தே நாட்களில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

இதனால் திரையரங்குகளைப் பகிர்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்கள் பிரிந்து செல்லும் வாய்ப்பும் இருப்பதைக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட இரண்டு பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்குகளுக்கும் இடையே பெரிய மீட்டிங்கே நடைபெறுகிறது.

சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குபின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தெலுங்கு திரைப்படத்துறையில் அதிகபட்ச செலவில் தயாராகிவரும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். இப்படத்தில், அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையில்ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படம், அக்டோபர் 2 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தைத் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளராக அறியப்படும்ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon