மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

வில்லியைத் தேடும் சசிகுமார்

வில்லியைத் தேடும் சசிகுமார்

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் பரமகுரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியாகியது.

சசிகுமாரின் பரமகுரு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலை தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் போஸ்டரில், சசிகுமார் பூதக்கண்ணாடி வழியே கோப்புகளை பார்ப்பது போல வெளியாகி இருக்கிறது. சுவாரஸ்யமும், அடர்த்தியும் கலந்த புலனாய்வுத் திரில்லராக இப்படம் வெளியாகவிருக்கிறது. சிறப்பம்சமாக இப்படத்தில் தடம் பட நாயகி வில்லியாக நடிக்கிறார்.

பரமகுரு படத்தை மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கிறார். இவர் இந்த படத்தில் உள்ள நெகட்டிவ் ரோல் ஒன்றில் நடிக்க நடிகையை தேடி வந்தார். இதனை அறிந்த அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் வித்யா பிரதீப்பை பரிந்துரை செய்துள்ளார். தடம் படத்தில் தனது கதாபாத்திரத்தை ரசிக்கும் படி மாற்றிய வித்யா பிரதீப்பின் நடிப்பை பார்த்து வியந்த ஒளிப்பதிவாளர் கோபிநாத், இப்படத்தின் நெகட்டிவ் ரோல் கதாபாத்திரத்தை செய்ய சரியான தேர்வாக அமைவார் என இயக்குநரிடம் பரிந்துரை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சசிகுமாருக்கு வில்லியாக அமைந்தார் வித்யா பிரதீப்.

அனன்யா, மானஸா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம், அப்புகுட்டி ஆகியோர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் பரமகுரு வெளியாகவிருக்கிறது.

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon