மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

3 லட்சம் விவசாயிகளுக்காக....

 3 லட்சம் விவசாயிகளுக்காக....

விளம்பரம்

சத்குரு அவர்களின் காவேரி கூக்குரல் பயணம் செப்டம்பர் 11 முதல் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது. ஓசூர் அதியமான் கல்லூரியின் வரவேற்புக் குரலோடு காவேரி கூக்குரல் தமிழகத்தில் தடம் பதித்தது.

பாடகர் கார்த்திக், ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே...’ என்ற பாடலைப் பாடி மனமெங்கும் கான நீர் பாய, அதன் பின் காவேரி கூக்குரலில் பேசினார் சத்குரு.

“காவேரி தமிழகத்தில் பாயத் தொடங்கும் இடம் இது,. அதனால்தான் எங்கள் பயணமும் இங்கே தொடங்குகிறது. இது இன்னொரு மரம் வைக்கும் இயக்கம் அல்ல. இதன் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டின் பிரச்சினை என்னவென்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பிரச்சினை என்ன, அதன் தீர்வு என்ன, அதில் நம் பங்கு என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த இருபது வருடத்தில் 3 லட்சம் விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். லோன் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று செய்திகளில் போடுகிறார்கள். அது உண்மையல்ல... மண் வளமாக இருந்தால், தேவையான நீர் இருந்தால் அவன் தற்கொலை செய்துகொள்வானா? அவனுக்குள் எவ்வளவு வேதனை இருந்தால் உயிரை மாய்த்துக் கொள்வான்.

இந்த 70 வருடங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போர்களில் இரு பக்கமும் கூட 3 லட்சம் பேர் சாகவில்லை. ஆனால் இருபது வருடத்தில் 3 லட்சம் விவசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.காவேரி வளையத்தில் 47 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். சில பேர் என்னை கேட்கிறார்கள், உங்களுக்கு ஏன் இந்த வேலை என்று? நமக்கு உணவு கொடுப்பவர்கள் தற்கொலைசெய்துகொள்கிறார்கள் என்பதை விட இன்னும் வேறு என்ன நடக்க வேண்டும்?” என்ற சத்குருவின் கேள்வி ஒவ்வொருவரையும் உலுக்கியது

(காவேரி கூக்குரல் ஒலிக்கும்)

விளம்பர பகுதி

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon