Hதொழிலதிபர் ரீட்டா தற்கொலை!

public

சென்னையில் கார் ஷோரும் நிறுவனத்தின் இணைத் தலைவர் ரீட்டா லங்காலிங்கம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் வசித்து வருபவர் ரீட்டா ஜானகி லங்காலிங்கம். லான்சன் டொயோட்டா ஷோருமின் இணைத் தலைவராகவும் இருந்துவந்தார். இவரது கணவர் லங்காலிங்கம் இதே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை ரீட்டாவின் வீட்டில் மேற்பார்வையாளராக பணிபுரியும் ஏசுபாதம் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அருகிலிருந்த அறையில் எட்டிப் பார்த்தபோது, அங்கு ரீட்டா தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த காவல் துறையினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, ரீட்டாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆட்டோ மொபைல் துறைகளில் விற்பனை மந்தநிலை நிலவி வரும் நிலையில், இவர்களது நிறுவனத்திற்கும் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் தொழில் நலிவு தொடர்பாக இரு நாட்களுக்கு முன்பு லான்சன் டொயொட்டாவின் அனைத்து கிளைகளின் மேலாளர்களின் கூட்டத்தை ரீட்டா நடத்தியிருக்கிறார். அப்போது, மேலாளர்களை ரீட்டா கடுமையாக திட்டியதாகவும் இதுதொடர்பாக கணவன் – மனைவிக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அலுவலகத்திலிருந்து நேற்றிரவு வீடு திரும்பியபோது இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குச் சென்றவுடன் உள்ளே பூட்டிக்கொண்ட ரீட்டா, கணவர் லங்காலிங்கத்தை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனையடுத்து, அருகிலுள்ள விடுதியில் அறையெடுத்து தங்கியிருக்கிறார் லங்காலிங்கம். இந்த நிலையில் ரீட்டா லங்காலிங்கம், திரைச்சீலையை பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

ரீட்டாவின் தற்கொலைக்குக் காரணம் தொழில் நஷ்டமா அல்லது குடும்பப் பிரச்சினையா என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ட்விட்டர் பக்கத்தில், “லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்மேன் தூக்கிட்டு தற்கொலை. தொழில் நஷ்டம் காரணமாக கணவன் – மனைவி இடையே சமீபத்தில் சண்டை ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மோடியின் ஆட்சியில் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *