மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 10 டிச 2019

உன்னாவ் வழக்கு : எய்ம்ஸில் நீதிபதி விசாரணை!

உன்னாவ் வழக்கு : எய்ம்ஸில் நீதிபதி விசாரணை!

உன்னாவ் பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவர் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் இன்று வாக்குமூலம் பெறப்படவுள்ளது. இதற்காக டெல்லி எய்ம்ஸ் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா வருகை தந்தார்.

உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட உன்னாவ் பெண் கடந்த ஜூலை மாதம் தனது உறவினர் மற்றும் வழக்கறிஞருடன் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். இதில் உன்னாவ் பெண்ணின் உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பிலிருந்து வருகின்றனர். விபத்து ஏற்பட குல்தீப் சிங் செங்கார் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது

இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நீதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக சிறப்பு நீதிமன்றம் அமைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி எய்ம்ஸில் தனி அறையில் அமைக்கப்பட்ட தற்காலிக நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா இன்று காலை வருகை தந்தார். குற்றம்சாட்டப்பட்ட குல்தீப் செங்காரும் அவரது கூட்டாளியான சசி சிங்கும் அழைத்து வரப்பட்டனர். இந்தநிலையில் உன்னாவ் பெண்ணிடம் நீதிபதி வாக்குமூலம் பெறவுள்ளார். அதற்கு முன்னதாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon