விளம்பரம்
தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் வேலை வாய்ப்புக்காக சென்னையை தேடி வந்து செட்டிலானவர்கள் பல பேர் இருக்கிறோம். தங்கள் சொந்த ஊர்களில் இருக்கும் பூர்வீக வீடு, நிலங்களை விற்க மனமின்றி உறவுக்காரர்களிடத்திலும், நம்பிக்கையான நண்பர்களிடத்திலும் அவற்றை விட்டுவிட்டு வந்தாலும், ‘சொத்துக்களை ஒழுங்கா பாத்துக்குறாங்களா இல்லையா?’ என்று மனம் பதைக்கும். அவ்வப்போது ஊருக்கு ஒரு எட்டு வைத்து பார்த்துவிட்டு வந்துவிடுவோம்.
சென்னையில் இருப்பவர்களுக்கே இப்படி என்றால்... இதே மாதிரி சென்னையை பூர்வீகமாகக் கொண்டு வெளிநாடுகளில் செட்டில் ஆனவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்டவர்களின் மனக் கவலை போக்கும் மாமருந்தான நிறுவனம்தான் repinindia நிறுவனம்.
கடந்த முப்பது ஆண்டுகளாகவே சென்னை அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் இருந்து வெளிநாடுகளில் சென்று செட்டிலானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வெற்றிகரமான தொழிலதிபர்களாகவோ, பெரு நிறுவனங்களில் உயரதிகாரிகளாகவோ இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் வேர்கள் இங்கே தமிழ்நாட்டில், சென்னையில்தான் இருக்கின்றது.
திரைகடலோடி பெருந்திரவியம் தேடிக் கொண்டாலும், தாங்கள் சிறுவயதில் தவழ்ந்த பூர்வீக வீடு, தோட்டங்கள் என்று பால்யத்தை சேமித்து வைத்திருக்கும் சொத்துகளை இங்கே விட்டுவிட்டுதான் அவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்கே என்னதான் சொகுசாக இருந்தாலும், கடல் தாண்டி அவர்களின் மனசு இந்த பூர்வீக சொத்துக்களைப் பற்றித்தான் கவலைப்படும். காரணம் அடிக்கடி வந்து நேரில் பார்த்து பராமரிக்க முடியாது.
அதுவும் கடந்த சில பத்தாண்டுகளாக சென்னை அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் சொத்துப் பறிப்பு மாஃபியாக்களின் ஆதிக்கம் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஆறு மாதம் எட்டிப் பார்க்கவில்லை என்றால் போலி டாக்குமெண்ட் தயாரித்து ஜாலியாக விற்றுவிட்டுப் போய்விடுகிறார்கள். அதன் பின் கோர்ட் வழக்கு என்று அலைந்தாலும், வழக்கு நடத்தவே இன்னொரு வாழ்நாள் தேவைப்படும்.
இந்தக் கவலைகள் தின்னத் தகாதிருக்க நீங்கள் அணுக வேண்டிய நிறுவனம்தான் repinindia . உங்கள் வேர்ச் சொத்துகளோடு உங்களின் உறவு நீடித்திருக்க repinindia நிறுவனம் பலமாகவும், பாலமாகவும் செயல்படும்.
முறையாகப் பதிவு செய்யப்பட்ட repinindia நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இப்போது செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் உங்கள் சொத்துகள் இருக்க, நீங்கள் வெளிநாடுகளில் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களாrepinindia வை தொடர்புகொள்ளுங்கள். கவலைகளை துடைத்தெறியுங்கள்.
E-Mail : [email protected]
விளம்பர பகுதி