மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல!

நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல!

பெண்கள் கையாளும் வகையில் தண்ணீர் கேன்களை வடிவமைக்க உத்தரவிட கோரிய வழக்கில் மனுதாரருக்குச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் குடிநீருக்காக 20 முதல் 25 லிட்டர் வரை மினரல் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் குடிநீர் கேன்களைப் பெண்கள் தூக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த தீபா ஸ்ரீ என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களைப் பெண்களால் கையாள முடியவில்லை என்றும், அவற்றைச் சுகாதாரமான முறையில் பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு நேற்று (செப்டம்பர் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நினைக்கும் உத்தரவுகளைப் பெற நீதிமன்றம் ஒன்றும் வணிக வளாகம் அல்ல என்றும் மனுதாரர்களின் இதுபோன்ற கோரிக்கைகளை அரசிடம் கொண்டு போய் சேர்க்க நீதிமன்றம் ஒன்றும் தபால் நிலையம் கிடையாது என்றும் கண்டனம் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon