மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

மிஸ்டர் அண்ணாமலை, அடுத்து நீலாம்பரி 2 வருதாம் :அப்டேட் குமாரு

மிஸ்டர் அண்ணாமலை, அடுத்து நீலாம்பரி 2 வருதாம் :அப்டேட் குமாரு

ஆஃபீஸ் வர லேட் ஆகும். நீங்க அப்டேட் குமாரு ரெடி பண்ணிடுங்கன்னு மேனேஜர்ட்ட சொன்னா, பத்து ட்வீட்டை காபி பேஸ்ட் பண்றதெல்லாம் ஒரு வேலையா. நான் நிர்மலா சீதாராமன் பேட்டி பாத்துட்டு இருக்கேன். நீயே வந்து பண்ணிடுன்னாப்ல. நானும் ஆஃபீஸ் வந்து பத்து ட்வீட் லிங்கை காபி பேஸ்ட் பண்ணி அனுப்பி விட்டா, ‘என்னப்பா நீ இப்டி பண்ணிட்ட. இதை எப்டி படிக்கிறது’ன்னு டென்சன் ஆவுறார். ஏன் சார், இளைஞர்கள் எல்லாரும் கால் டாக்சி யூஸ் பண்றதால தான் ஆட்டோமொபைல் சேல்ஸ் குறைஞ்சிடுச்சின்னு அந்தம்மா அடிச்சு விடுறாங்க. அதையும் நீங்க கேட்டுட்டு சில்லறையை சிதற விடுறீங்க. என் வேலையை நான் ஒழுங்கா முடிக்கலைன்னா மட்டும் கேள்வி கேப்பீங்களா. நானும் ஒரு மத்திய அரசுக்கு தான் சார் வேலை செய்றேன்னு சொன்னேன். அதெப்படிப்பா நீ வேலை செய்யமுடியும்னு கேட்டார். தமிழ்நாட்டு ஆளுங்கட்சி என்னவெல்லாம் செய்யுதுன்னு தினமும் உலகம் முழுக்க போட்டு குடுக்குறனே அது போதாதான்னு கேட்டா கோவமா போய்ட்டார். தீபாவளி போனஸ் வேற வருது. இவரை வேற பகைச்சிக்கிறோமேன்னு நினைச்சிக்கிட்டே டீ கடைக்கு போனா, ‘அண்ணாமலை 2’ அப்டின்னு அடைமொழியோட எடப்பாடி ஃபோட்டோவை போஸ்டர் அடிச்சிருக்காய்ங்க. ஜூனியர் பையன் ஃபோட்டோ எடுத்து பா.ஜ.கவுக்கு அனுப்பிருவோம்ணே அப்டின்னான். இதை பா.ஜ.கவுக்கு அனுப்பக்கூடாது தம்பி, அமமுக-வுக்கு அனுப்பிவிடுன்னுட்டேன். நான்லாம் அரசியல்ல திருட்டுத்தனமா பி.எச்.டி முடிச்சவன்னு சொன்னேன். அப்டியே நம்பிட்டான். நீங்க அப்டேட்டை படிங்க, நான் போய் “நீலாம்பரி 2” அப்டின்னு சசிகலா ஃபோட்டோவை பேனருக்கு ஆர்டர் குடுத்துட்டு வர்றேன்.

உள்ளூராட்டக்காரன்

சட்னி, சாம்பார் எல்லாம் பிளாஸ்டிக் பையில கட்டி கொடுக்குறாங்க

எல்லாத்தையும் போட்டு எடுத்துட்டு போக ஒரு கேரி பேக் கேட்டா, பசுமையை பாதுகாப்போம்னு அட்வைஸ் பண்ணி அனுப்புறானுங்க

கோழியின் கிறுக்கல்!!

ஞாயிற்றுக்கிழமையின் நீளத்தை அதிகமாக்கவும், திங்கள் கிழமையின் நீளத்தை குறைக்கவும் வழியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!

எனக்கொரு டவுட்டு ⁉

அமைதியா உக்காந்துட்டு இருக்கும்போது வீட்ல உள்ள குழந்தைகள் நம்மல அடிச்சிட்டு போற மாதிரிதான் நல்லா போய்ட்டு இருக்குற வாழ்க்கைல பிரச்சனையும் ரெண்டு அப்பு அப்பிட்டு போயிருது..!

கருப்பு மன்னன்

இஸ்ரோ : ஹலோ...

லேண்டர் : -----

இஸ்ரோ : ஹலோ... எங்க இருக்க...???

லேண்டர் : ----

இஸ்ரோ : உசுரோடதான் இருக்கியா...???

லேண்டர் : ----

இஸ்ரோ : நான் பூத்துல இருந்தது அன்புமணி பேசுறேன்...

லேண்டர் : hahahaha

- படித்ததில் சிரித்தது!

உள்ளூராட்டக்காரன்

பிரசாந்த், அர்ஜுன், சரத்குமார் நடிச்ச சீன் எல்லாம் காமெடி சேனல்ல வருதுன்னா அதுக்கு காரணம் வடிவேலுவா தான் இருக்கும்.

ஜால்ரா காக்கா

2019 வருஷம் ஆரம்பிச்சு 9 மாசம் ஆவுது இந்த 9 மாசத்துல எதுனா ஒரு நல்லது நடந்து இருக்கா??

ஜெயிக்க வேண்டிய வேல்டு கப் செமிபைனல் மேட்ச்ல இந்தியா தோல்வி

சந்திராயன் 2 தோல்வி

பொருளாதார மந்த நிலை

பார்லே ஜி பிஸ்கட் கம்பெனி மூடிட்டானுக

தங்கம் கிராம் 3000+

A.P.P.

மனைவி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்ற கணவர்...! - வைரலாகும் புகைப்படம்.

இதென்ன பிரமாதம்? மனைவி படம் பார்க்க குழந்தையை தூக்கி வெச்சிட்டு தியேட்டருக்கு வெளியே இங்குட்டு எத்தனை கணவன்மார்கள் நிக்காங்க. என்ன இப்படி விளம்பர படுத்திக்கிட அவங்களுக்கு தெரியாது.

மித்ரன்

பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் #

என்ன காரணமுன்னு சொல்லி பாருங்களேன் நீங்க தான் தைரியமான ஆளாச்சே..?!

எமகாதகன்

நிறைய பேருக்கு

பசி இல்லை என்றாலும்

ஒரு நாளைக்கு மூன்று வேளை

சாப்பிடவேண்டும் என்று

சாப்பிடுவதால் தான்

தொப்பையே வருகிறது

mohanram.ko

தம்பி உடையான்,

கடைக்கு செல்ல அஞ்சான்

ரமேஷ்.ஏ

என் முகத்தில் முளைத்திருக்கும் தாடி...என் "சேவ்"விங்ஸின் லட்சணம் என்ன என்பதை உணர்த்திவிடும்...!!!!

சரவணன் Ucfc

கணவன்: நாலு பிள்ளை இருந்தால் தான் கேரம்மாவது விளையாடுவாங்கடி..

மனைவி: கேரம் இப்ப செல்லுல ஆன் லைன்ல தான் விளையாடுறாங்க ஒரு பிள்ளையே போதும்..

ரஹீம் கஸ்ஸாலி

டாஸ்மாக் கடைகள் அனைத்தும் எப்போது மூடப்படும் தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி.

இதென்ன கேள்வி?... வழக்கம்போல் இரவு பத்து மணிக்குத்தான்.

தமிழ்ச்செல்விசௌந்தரராஜன்

ஆணின் முட்டாள்

தனத்தை

புரிந்து கொள்ளும்

பெண்ணும்,

பெண்களின் குழந்தை தனத்தை ரசிக்கும் ஆணும் தான் உலகின்

மிகச் சிறந்த காதலர்கள்..!!

-தமிழ்ச்செல்வி

-லாக் ஆஃப்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon