மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

திமுகவினரே தமிழ்ப் பெயர் வைப்பதில்லை: துரைமுருகன்

திமுகவினரே தமிழ்ப் பெயர் வைப்பதில்லை: துரைமுருகன்

திமுகவினரே தமிழ்ப் பெயர்களை வைக்கத் தயங்குவதாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பாலசுப்பிரமணியம் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் நேற்று (செப்டம்பர் 9) நடைபெற்றது. அதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய துரைமுருகன், “வெள்ளைக்காரர்கள் வரவில்லை என்றால் இந்தியா சோமாலியா போல மாறியிருக்கும். இந்தியைக் கற்றுக்கொள்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் தாய்மொழி மீது அதிக பற்று வேண்டும். தனது பேத்தியை அழைத்து வந்த திமுககாரர் ஒருவரிடம் பேத்தியின் பெயரைக் கேட்டேன். அனிஜா என்று சொல்கிறார். இன்னொருவரிடம் கேட்டால் அஷ்வின் என்று சொல்கிறார். திமுகவினர் பலரின் இல்லங்களிலேயே தமிழ்ப் பெயர் இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும்” என்று தெரிவித்தார்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon