மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

அடையாறில் 108 ஆம்புலன்ஸ் விபத்து!

அடையாறில் 108 ஆம்புலன்ஸ் விபத்து!

அடையாறில் இன்று (செப்டம்பர் 10) அதிகாலை 4 மணியளவில் வேகமாக வந்த 108 ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் , மருத்துவ உதவியாளரை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சென்னை அடையாரிலிருந்து மத்திய கைலாஷ் செல்லும் பாதையில் படேல் சாலையில் இன்று அதிகாலை வேகமாக ஒரு ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. ஆம்புலன்சை சங்கர் என்பவர் ஓட்டினார். மருத்துவ உதவியாளர் கோமதி என்பவரும் ஆம்புலன்சில் இருந்தார். அதிவேகமாகச் சென்ற ஆம்புலன்ஸ் அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஆம்புலன்ஸ் சாலையின் நடுவே கவிழ்ந்தது. அப்போது அங்கு வேறு எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் இருவரும் பலத்த காயமடைந்திருக்கின்றனர். விபத்து ஏற்பட்ட சிறிது தொலைவிலேயே வெளிநாடுகளில் இருந்து முதல்வர் அவ்வழியே இல்லம் திரும்புவதை ஒட்டி அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் காயமுற்ற இருவரையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரையும் அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்துள்ளனர். அவர்களுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon