மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

புகழேந்தி மீது நடவடிக்கை: தினகரன்

புகழேந்தி மீது நடவடிக்கை: தினகரன்

புகழேந்தி குறித்து புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, கட்சி நிர்வாகிகளுடன் உரையாடும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. அதில், 14 வருடங்கள் அரசியலில் இல்லாத தினகரனை தான் தான் அரசியலுக்கு அழைத்துவந்து ஊருக்கு அறிமுகப்படுத்தியதாக புகழேந்தி குறிப்பிட்டிருந்தார். தான் அவ்வாறு பேசியது உண்மைதான் என்று விளக்கமளித்த புகழேந்தி, அமமுக ஐடி விங் தான் இதனை வெளியிட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு அமமுக தரப்பிலிருந்தும் தொடர்ந்து எதிர்வினையாற்றப்பட்டது.

இந்த நிலையில் திருச்சியில் இன்று (செப்டம்பர் 10) செய்தியாளர்களிடம் பேசிய தினகரனிடம், புகழேந்தி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “சில நிகழ்வுகள் குறித்து கேள்வி கேட்டு நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். இரண்டு நாட்களாக என்ன நடக்கிறது என்பதை நீங்களும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறீர்கள். நானும் ஒரு பார்வையாளனாக தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் விசாரிப்பேன். யார் மீது தவறு இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.

மேலும், “எல்லோரும் கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஒருசிலர் தங்களது சுயநலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே சென்றுள்ளனர். அதனை நான் துரோகம் என்று கூற விரும்பவில்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் தீர விசாரித்து எடுக்கப்பட்டவை. தற்போதும் தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார் தினகரன்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon