மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 14 டிச 2019

சிதம்பரமே காரணம்: அதிகாரியின் தற்கொலைக் கடிதம்!

சிதம்பரமே காரணம்:  அதிகாரியின் தற்கொலைக் கடிதம்!

பிரதமர் மோடிக்கு தற்கொலைக் கடிதம் எழுதி ஒன்றை வைத்துவிட்டு, ஓய்வுபெற்ற விமானப்படை ஊழியர் ஒருவர் அலகாபாத் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த பைஜன் தாஸ் என்பவர் விமானப்படை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, தனியார் ஹோட்டல் ஒன்றில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார் பைஜன். தற்கொலைக்கு முன் பிரதமர் மோடிக்கு 5 பக்க தற்கொலைக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் பைஜன்.

தற்கொலைக் குறிப்புடன் தனது சொந்த தகனத்திற்காக ரூ .1500 மற்றும் அறைக்கு செலுத்த ரூ.500-ஐயும் விட்டுச் சென்றார் அவர். அவரது நிதி நிலைமை காரணமாக அவரை தகனம் செய்வோருக்கு அதிக பணம் கொடுக்க முடியாது என்றும் பைஜன் தாஸ் கூறினார்.

பைஜன் தாஸ், பொருளாதார மந்தநிலையின் காரணமாக, ஓய்வுக்குப் பிறகு தன்னால் எதையும் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம். மோடி அரசு தான் சரிவுக்கு காரணம் என யாராலும் கூற முடியாது. தவறான நிதி மேலாண்மை என்பது உடனடியாக வந்தது கிடையாது.

பணமதிப்பழப்பு மற்றும் ஜிஸ்டி அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டது தற்காலிகமான பாதிப்பு தான் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: புறப்படுகிறார் புகழேந்தி: வீடியோ வெளியான முழுப் பின்னணி!


திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?


வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு


சிதம்பரம் நிலை: ரஜினி கவலை!


திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த்: உற்சாகத்தில் தேமுதிக!


திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon