மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

சிதம்பரம் நிலை: ரஜினி கவலை!

சிதம்பரம் நிலை: ரஜினி கவலை!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஐந்து முறை தொடர்ச்சியாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். கடந்த 5ஆம் தேதி ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, திகார் சிறையில் 7ஆம் எண் அறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டார். அவருக்கு வெஸ்டர்ன் டாய்லெட் உள்ளிட்ட சில வசதிகள் மட்டுமே செய்துகொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் நாள் இரவு சிறையில் சிதம்பரம் தூக்கமின்றி தவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சிதம்பரம் கைது செய்யப்பட்டது முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டது வரையிலான நிலை குறித்து அவரின் நண்பரான நடிகர் ரஜினிகாந்த் பொதுவெளியில் கருத்து எதுவும் கூறவில்லை. ஏனெனில் சிதம்பரம் கைதின் பின்னணியில் மோடி, அமித் ஷா ஆகியோர் இருப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினி பாஜக தரப்பில் தொடர்ந்து நல்லுறவில் இருந்துவருகிறார். அவரை தமிழக பாஜகவுக்கு தலைமையேற்க வருமாறு கட்சியின் மேலிடம் சார்பில் தொடர்ந்து அழுத்தமும் தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் கைதுக்கு எதிராக கருத்து தெரிவித்து பாஜகவின் மனக்கசப்புக்கு ஆளாக வேண்டாம் என்பதால் ரஜினிகாந்த் கருத்து சொல்வதை தவிர்த்துவிட்டார்.

தனிப்பட்ட முறையில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குடும்பத்தினரை போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறலாம் என்றால், அவர்களின் தொலைபேசி உரையாடல் டேப் செய்யப்பட வாய்ப்பிருப்பதால் அதனையும் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்கிறார்.

இந்த நிலையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் அடைக்கப்படும் வரை எதுவும் பேசாமல் இருந்துவந்த ரஜினிகாந்த், திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்ட பிறகு தனது மனைவி லதாவை விட்டு, நளினி சிதம்பரத்திடம் பேசச் சொல்லியிருக்கிறார். ரஜினி குடும்பத்தின் தொழில் ரீதியான வழக்குகள், குடும்ப ரீதியான வழக்குகளுக்கு லதா ரஜினிகாந்துக்கு சட்ட ஆலோசகராக இருப்பவர் நளினி சிதம்பரம்தான். அந்த வகையில் இருவரும் நெருக்கமானவர்கள்.

ரஜினி சொன்னபடி நளினி சிதம்பரத்திடம் போனில் பேசிய லதா, ரஜினிகாந்த் விசாரித்ததை அப்படியே கூறியிருக்கிறார். முதலில் சிறையில் சிதம்பரம் எப்படி இருக்கிறார் என்று விசாரித்த லதா, “ சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்காக ரஜினி மிகவும் கவலைப்படுகிறார். அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்று விசாரிக்கச் சொன்னார். 74 வயது ஆன ஒருவரை ஏன் சிபிஐ காவல், திகார் சிறை, வழக்குகள் என்று அலைக்கழிக்கிறார்கள் என ரஜினி மிகவும் நொந்துகொண்டார்” என்று நளினியிடம் கூறியிருக்கிறார். இப்படியாக இருவரின் உரையாடலும் சுமார் 20 நிமிடம் வரை நீண்டிருக்கிறது. இதன்மூலம் தனது நண்பர் சிதம்பரத்தின் கைது குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கவில்லையென்றாலும், மனைவி மூலமாக தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.


மேலும் படிக்க


திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?


வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு


பேக் அப்: அனு கொடுத்த அறிவிப்பு!


சந்திராயன் 2: லேண்டர் விக்ரமின் நிலை என்ன?


விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை!


ஞாயிறு, 8 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon