மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

பேக் அப்: அனு கொடுத்த அறிவிப்பு!

பேக் அப்: அனு கொடுத்த அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு மாப்பிள்ளை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அனு இம்மானுவேல் தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமானது பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தின் மூலம்தான். அதன்பின் அவரது இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தார். தற்போது மூன்றாவது முறையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிக்கிறார்.

அனு இம்மானுவேல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் சகோதரியாக நடித்துள்ளார். பாரதிராஜா, சமுத்திரகனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு ராமேஸ்வரத்தில் முகாமிட்டிருந்தது. பாடல் காட்சி மட்டும் மீதமிருந்த நிலையில் அந்தப் பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக அனு இம்மானுவேல் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

டி.இமான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ஏற்கெனவே இறுதிகட்டப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது அவை வேகமெடுத்துள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


மேலும் படிக்க


பாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடருமா?


சந்திரயான் 2 திடீர் திருப்பம்: விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல்கள் கிடைக்கவில்லை!


கிணற்றைக் காணவில்லை: வடிவேலு காமெடி அல்ல வழக்கு!


விமர்சனம்: மகாமுனி


சனி, 7 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon