மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு

வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு

இந்தியாவே இன்னைக்கு சந்திராயனை பத்திதான் பேசிகிட்டு இருக்கு. சர்வதேச அளவுல இந்தியா படைக்க இருந்த சாதனை ஜஸ்ட் மிஸ் ஆகிருச்சு. இருந்தாலும் அதுல இருந்து நம்ம விஞ்ஞானிகள் மீண்டு வந்துடுவாங்க. அதுக்குள்ள வட நாட்டுப் பக்கம் டிவிட்டர்ல பாகிஸ்தான் கூட போரையே ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க பாகிஸ்தானை இழுத்தா, நம்ம ஆளுங்க வடிவேலுவை இழுத்துட்டு வந்து மீம்ஸ் போட்டுகிட்டு இருக்காங்க.மேல இருக்குற மீம்க்கு வடிவேலு ஒரு தீர்க்கதரிசின்னு நண்பர் ஒருத்தர் கமெண்ட் போட்ருக்காரு. துன்பம் வந்தா சிரிக்கச் சொல்லிருக்காங்கள்ல, அதுனால அங்கிட்டு வேண்டாம், இங்கிட்டு நாம வடிவேலு பக்கம் போவோம்.

பழைய சோறு

அடுக்குமாடியின் உச்சியில் நின்று எங்கள் ஊரை பார்க்கிறேன் நான்கைந்து செல்போன் டவர்களும், பள்ளிவாசல் கோபுரமும், உலக ரட்சகர் ஆலயமும், அம்மன் கோவில் கலசமும், கண்களுக்கு தெளிவாக தெரிகிறது

அதே கணம் வெள்ளை புறா ஒன்று இந்த கோவில்களை விடவும் உயரமாக பறந்துகொண்டிருந்தது..!

கபிலன் சிங்காரவேலு

இன்னிக்கி சந்திரயான் மட்டும் நிலாவில் இறங்கி இருந்துச்சுன்னா நாளைக்கு மாரிதாஸ், நாராயணன், மாலன் எல்லாம் விண்வெளி ஆராயச்சியாளர் அவதாரம் எடுத்து இருப்பாங்க.,

எப்டியோ அதுல இருந்து நாம தப்பிச்சுட்டோம்

ரஹீம் கஸ்ஸாலி

நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே சந்திராயன்2 பெரிதுபடுத்தப் படுகிறது!- மம்தா பானர்ஜி

க.க.க.போ.

சுபாஜி

மீ: அண்ணே எங்கன வேகமா கிளம்பிட்டீங்க

விவசாயி: பயிர்க்கு பூச்சி மருந்து அடிக்கனும் அதான் அவசரமா போரேன்

மீ: சரி அதுக்கு எதுக்கு ஆச்சி மசலா பாக்கெட்ட எடுத்துட்டு போறீங்க

விவசாயி: அதுவா தம்பி அதான் ஆச்சி மசாலாவுல பூச்சி மருந்து இருக்காமே அதான் விலை கம்மினு வாங்கிட்டு போரேன்

பிளாக் லைட்

ஏலியன் தான் சந்திராயன் 2 வ கடத்தி வச்சிருக்கும்ன்னு போற போக்குல சொல்லிட்டு போகுது சின்ன வாண்டு !!

அவங்க உலகம் தனி உலகம் தான். !

மெத்த வீட்டான்

சந்திராயன் 2 க்கான செலவு நம்ம தமிழ்நாட்டுல தீபாவளி பண்டிகைக்கு குடித்து அழிக்கிற தொகைன்னு ஒரு விஞ்ஞானி டிவியில சொல்றாரு..இது தெரிந்தால் நாங்க குடிக்கிற காசுல நீங்க ஏன் ராக்கெட் செஞ்சிங்கன்னு நம்ம டாஸ்மாக்வாசிகள் கேட்பாங்களேன்னு நினைச்சாதான் கண்ணு வேர்க்குது !

நெல்லை அண்ணாச்சி

70% பணிகள் நிறைவு...

கட்சியை சொல்லுறாங்களா....

" தர்பார் " படத்தை சொல்லுறாங்களா...!!\

mohanram.ko

பூச்சி மருந்து கலந்துள்ளதால், ஆச்சி மசாலாவுக்கு கேரளாவில் தடை- செய்தி

இனி ஒரு 'விதி' செய்வோம் என்பதை நாம தான் தப்பா புரிஞ்சிக்கிட்டோமோ?

கபிலன் சிங்காரவேலு

சந்திராயன் திட்டமிட்ட படி தரையிறங்காததுக்கு காரணம் என்னன்னு கேட்டா போதும்

இருக்கவே இருக்குன்னு பழியை காங்கிரஸ் மேல போட்டாலும் போட்டுருவானுக

உள்ளூராட்டக்காரன்

இந்த சூழ்நிலையிலும் நம்ம ஆளு யாவாரம் பார்த்தாரு பாத்தியா...

A.P.Perumal.

நான் பட்ட தோல்விக்கெல்லாம் பிரதமர் ஒருவாரம் என்னைய கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லனும். அம்புட்டு பட்டுருக்கேன். ஆனாலும் தைரியமாத்தான் இருக்கேன்.

பழைய சோறு

கோடி மருந்துகள் இருந்தென்ன பயன் குழந்தையின் சிரிப்பொன்று தானே அப்பாவை குணப்படுத்துகிறது..!

Ashok.R

அவரு கூடதான் டீமாண்டைசேஷன், ஜி.எஸ்.டினு பல ஆராய்ச்சிகள் பண்ணி மக்கள் வாயில மண்ணப் போட்டாரு. அவரு என்ன அழுதுட்டா இருக்காரு.

பிளாக் லைட்

இன்னும் இரண்டு துணை முதல்வர்கள் - கர்நாடகா

என்னடா இது.. "குழந்தைங்க எஸ்ட்ரா சாக்லேட் கேட்டா.. சரி இந்தா ஒன்னு கூட வச்சிக்கோ"ன்னு கொடுக்க மாதிரி கொடுக்கிறீங்க !!

டீ இன்னும் வரலை

விஜய் ரசிகர்கள் பெரும்பாலானோர் அதிமுக பக்கமே உள்ளனர்... - ராஜன் செல்லப்பா...

ஆனா... அ தி மு க... ல எல்லாருமே பி.ஜே.பி பக்கம் அப்படித்தானே...

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


பாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடருமா?


சந்திரயான் 2 திடீர் திருப்பம்: விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல்கள் கிடைக்கவில்லை!


கிணற்றைக் காணவில்லை: வடிவேலு காமெடி அல்ல வழக்கு!


விமர்சனம்: மகாமுனி


சனி, 7 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon