மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

காவேரி கூக்குரல்: கரம் கொடுத்த மனிதச் செடி!

 காவேரி கூக்குரல்: கரம் கொடுத்த மனிதச் செடி!

காவேரியை மீட்க வேண்டும், அதன் வளங்களைக் காக்க வேண்டும் என்ற ஒற்றைப் பொதுநோக்கத்தோடு சத்குரு தலைக்காவேரியில் இருந்து தனது மோட்டார் சைக்கிள் பயணத்தைத் துவக்கியிருக்கிறார்.

காவேரி ஊற்றெடுக்கும் மூலமான தலைக் காவேரி கோவிலில் காவேரித் தாய்க்கு தனது மரியாதையை செலுத்திவிட்டு, மோட்டார் சைக்கிள் இளைஞர் படையுடன் அவர் மடிக்கேரிக்கு தனது முதல்நாள் பயணத்தை வெற்றிகரமாக துவங்கினார்.

மடிக்கேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகர் மாண்புமிகு கே.ஜி..போபையா உட்பட பல்வேறு துறைசார்ந்த சிறப்பு விருந்தினர்கள் சத்குருவுடன் நிகழ்வில் இணைந்தனர். அதன் பின் சத்குரு, ராஜ நாகங்களின் தேசமாக அறியப்படும் நாகர்ஹோலேவுக்கு விரைந்தார். அங்கு அவருக்கு மிகுந்த உற்சாகம் மற்றும் ஆரவாரத்திற்கு மத்தியில் பாரம்பரிய நடனக் கலைஞர்களின் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மடிக்கேரியில் இருந்து நாகர்ஹோல் வந்து தங்கினார்கள். மறுநாள் மாலை ஹன்சூரில் அடுத்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்த்தினார் சத்குரு. காவேரி கூக்குரல் (CAUVERY CALLING) என்பதன் முக்கிய பொருளே... காவேரித் தாய் தன் மரப் பிள்ளைகளை மனிதப் பிள்ளைகளால் இழந்து தவிக்கிறாள். அவளின் மடியில் மீண்டும் மரப் பிள்ளைகளை தவழ வைக்க வேண்டும். இதன் மூலமாகவே காவேரித் தாயை நாம் மீட்க முடியும்.

242 கோடி மரங்களை நாம் நடவேண்டும். இதைத்தான் சத்குரு தனது பிறந்தநாள் செய்தியாகவும் சொல்லியிருந்தார். ஒரு மரம் நடுவதற்காக 42 ரூபாய் தாருங்கள் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தார் சத்குரு அவர்கள். அந்த வகையில் ஹூன்சூரை சேர்ந்த 8 வயது அர்ஜுன் ராஜ், காவேரி ஆற்றை மீட்டெடுக்க மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டிருந்த சத்குருவை சந்தித்தான்.

தன் சேமிப்பில் இருந்து 42 ரூபாயை எடுத்து சத்குருவிடம் கொடுத்தான். எட்டுவயது மனிதச் செடி, காவேரியின் கூக்குரலுக்கு செவி மடுத்திருக்கிறான். சின்னஞ்சிறிய தொகையாயினும் எண்ணம் பெரிதான சத்குருவிடம் கொடுத்திருக்கிறான்.

காவேரியைச் சுற்றி இன்னும் மரங்கள் தேவை... அதை நடுவதற்கு மனிதக் கரங்கள் தேவை.

(காவேரி கூக்குரல் ஒலிக்கும் )

விளம்பர பகுதி

வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon