மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

அழகிரியை யார் நீக்குவது? -கராத்தே தியாகராஜன் கேள்வி!

அழகிரியை யார் நீக்குவது? -கராத்தே தியாகராஜன் கேள்வி!

நாங்குநேரியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ‘காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட முடியாதா?’ என்று பேசிய பேச்சுதான் இன்று தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகி வருகிறது.

அழகிரியின் இந்த பேச்சு பற்றி ஏற்கனவே இதே ரீதியில் பேசி இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும், முன்னாள் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜனிடம் பேசினோம்.

“இதே உரிமைக் குரலைதான் ஜூன் 21 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நான் எழுப்பினேன். அது தவறு என்று எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார் கே.எஸ். அழகிரி. ஆனால் அன்று நான் சத்தியமூர்த்தி பவன் என்ற அரங்கத்துக்குள் எழுப்பிய குரலை, இன்று பகிரங்கமாக நாங்குநேரியில் பேசியிருக்கிறார் அழகிரி. காங்கிரஸ்காரன் என்ற வகையில் இது எனக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால், நான் பேசியது தவறு என்று சொல்லி என்னை நீக்கினாரே அழகிரி... இன்று என் குரலையே மீண்டும் ஒலித்த அழகிரியை காங்கிரசில் இருந்து யார் நீக்குவது? எனது பேச்சால் திமுக புண்பட்டது என்று என் மீது நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் இப்போது அழகிரி பேச்சால் திமுக மகிழ்ந்திருக்குமா? மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? கராத்தே பேசினால் கட்டுப்பாட்டை மீறியது என்று அர்த்தம், அதையே அழகிரி பேசினால் தொண்டர்களின் உள்ளத்தை எதிரொலிப்பது என்று அர்த்தமா? ” என்று படபடவென பொரிந்து தள்ளிவிட்டார் கராத்தே தியாகராஜன்.

அழகிரியின் நாங்குநேரி பேச்சு தமிழ்நாடு முழுவதும் திமுகவினரிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon