மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

நிலாவுக்கு வண்டியை திருப்புங்க: அப்டேட் குமாரு

நிலாவுக்கு வண்டியை திருப்புங்க: அப்டேட் குமாரு

கல்யாணம், காதுகுத்து, ஏன் கருமாதி வரைக்கும் ஃபேஸ்புக், யூடியூப்ல லைவ் போட்டுகிட்டு இருக்காங்க. பத்தாயிரம் ரூபா போனை வச்சுகிட்டு இவங்க இப்படி அலப்பறை பண்ணும்போது கோடிக்கணக்குல பணத்தை போட்டு நிலாவுக்கு சந்திரயானை அனுப்புன இஸ்ரோ சும்மா இருக்குமா? நிலாவுல தரையிறங்கும் போது நைட் ஒரு மணிக்கு யூடியூப்ல லைவ் போடப்போறாங்களாம்.

சும்மாவே இப்ப உள்ள வாண்டுக, பேரண்ட்ஸை எல்லாம் காமெடி கேரக்டர்கள் மாதிரி தான் டீல் பண்ணுதுக. சோறு சாப்பிடவைக்க நிலாவுல பாட்டி வடை சுட்டுகிட்டு இருக்கு, கூட்டிட்டு போறேன்னு கதைவிட்டதுலாம் காலாவதியாகிப்போச்சு. இதுல கையில வீடியோ எவிடென்ஸே மாட்டுச்சுன்னா மதிக்கவே மாட்டாங்க.

குழந்தைகள் ஒருபக்கம் இருக்கட்டும், எடப்பாடி இன்னும் நாலு நாளுல வெளிநாட்டுல இருந்து வாராறே அவரு இந்த வீடியோவைப் பார்த்துட்டு அங்கிட்டு ஒரு டூரை போட்ருலாமான்னு கேக்காம இருக்கனுமேன்னு தான் மனசு கிடந்து அடிச்சுக்குது.. நீங்க அப்டேட்டை பாருங்க.

கோழியின் கிறுக்கல்!!

நெடுஞ்சாலையில் எந்த கவலையும் இல்லாமல், எந்த குறிக்கோளும் இல்லாமல் கடந்து செல்பவரை பார்த்தால் பாவமாக இருப்பதை விட, பொறாமையே அதிகமாக வருகிறது!!

எனக்கொரு டவுட்டு

என் மனதிற்குள் வருவாய் என சிம்பு பட தயாரிப்பாளர் போல காத்திருக்கிறேன் ஆனால் நீயோ சிம்பு போல மனதிற்குள் வர மறுக்கிறாயே..!

பிளாக் லைட்

நான் முதல்வராக வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை!- முதல்வர் பழனிசாமி.

நீங்க முதல்வர் ஆகுவேன்னு கனவுல கூட நினைக்கல.. நாங்க நீங்க முதல்வர் ஆனது கனவா இருக்க கூடாதான்னு நினைக்கிறோம் - மக்கள்

ரஹீம் கஸ்ஸாலி

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோதமல்ல!- கர்நாடக சட்ட அமைச்சர் மதுசாமி

ஆமாம். மக்களுக்காக பேசுவதுதான் தேச விரோதம்.

பிளாக் லைட்

வேகமெடுக்கிறது ரஜினியின் கட்சி பணிகள் #செய்தி

அடுத்த படம் ரிலீஸ்க்கு ரெடி ஆகிடுச்சு போல..

மித்ரன்

பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களை தடை செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை - நிதின் கட்கரி #

ஆமா அதற்கு பதிலாக கார் தயாரிப்பு கம்பெனிகளை ஒவ்வொன்னா மூடிருவோம்..?!

கோழியின் கிறுக்கல்!!

சோகங்கள் சூழ்ந்திருக்க, எங்கோ ஓர் மூலையில் ஒளிந்திருக்கும் மகிழ்ச்சியை தேடுவதிலேயே சோர்வடைந்து விடுகிறது மனது!!!

வானமே_எல்லை

நான் முதல்வராக வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை #முதல்வர் பழனிசாமி.

நாங்க மட்டும்?? நாங்க போட்ட ஓட்டு இட்லியில் முடிந்து போகும்னு நினைச்சமா கோபால்?!!

ஆர்வக்கோளாறு

நல்லவன் என்ற முத்திரை தன் மீது விழாமல் பார்த்துக் கொண்டவர்கள் எல்லாருமே நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..!!

வந்தியதேவ மன்னன்

குழந்தைகள் இருக்கும் வீட்டில் மொபைல் போன் ஸ்கிரீன் உடையாமல் இருந்தால் அந்த மொபைல் அதிசய பொருளாக பார்க்கப்படுகிறது ..

சுனா.பானா

ஒண்ணு ATM ல பணம் எடுத்ததும் மெஸேஜ் வரணும். இல்ல வரவே கூடாது. அதென்ன ஒரு நாள் கழிச்சு வர்றது? ஒரு செகண்ட் பக்குன்னு இருக்கா இல்லையா

ஜோக்கர்...

நாம் கவனிக்காமல் தவறவிட்ட "அழகான விஷயங்கள்" நம்மை சுற்றியுள்ளது என்று,

"மொபைல் சுவிட்ச் ஆப்" ஆன பிறகுதான் புரிகிறது...!!!

ரஹீம் கஸ்ஸாலி

பாலில் பிஸ்கட்டை நனைத்து சாப்பிடுங்கன்னு சொன்ன பிஸ்கட் கம்பேனிக்கே பால் ஊற்றிய அரசு நம்ம மோடி அரசுதான்.

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon