மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

கிணற்றைக் காணவில்லை: வடிவேலு காமெடி அல்ல வழக்கு!

கிணற்றைக் காணவில்லை: வடிவேலு காமெடி அல்ல வழக்கு!

ஈஞ்சம்பாக்கத்தில் கிணறு உட்பட 27 நீர்நிலைகள் காணவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதாக நாளுக்கு நாள் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புக்கேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன்.தங்கவேலு தாக்கல் செய்த மனுவில், நீர்நிலைகளைப் பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் நீர்நிலைகளை மீட்டெடுக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே காணாமல் போன நீர்நிலைகளைக் கண்டறிய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று (செப்டம்பர் 6) தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிணறு, குளங்கள் உட்பட 27 நீர்நிலைகள் எங்கே என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இம்மனு தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon