மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டால் பாதிப்பா? பன்னீர்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டால் பாதிப்பா? பன்னீர்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் பொதுவிநியோகத் திட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த உணவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சர் காமராஜும் நேற்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் மதுரை உசிலம்பட்டியில் இன்று (செப்டம்பர் 6) நடந்த பி.கே.மூக்கையாத் தேவரின் 40ஆவது குருபூஜையில் பங்கேற்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், இதுபற்றி விளக்கம் அளித்தார்.

“ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஆதரிப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் அனைத்து ஏழை மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்குச் சென்று உணவுப் பொருட்கள் வாங்குபவர்களுக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து உணவுப் பொருள் வாங்குகிறவர்களுக்கும் சேர்த்து அந்தந்த மாநிலங்களுக்கான உணவுப் பொருட்களை மத்திய அரசே முழுமையாக தந்துவிடுகிறது” என்று விளக்கினார் பன்னீர்செல்வம்.

திருப்பூரில் நேற்று நடந்த நிகழ்வில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்று கூறியிருந்தார். பன்னீர்செல்வத்திடம் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஸ்டாலின் கனவுலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஸ்டாலின் கனவு நனவாகவும் போவதில்லை” என்று கிண்டலாக பதிலளித்தார். மேலும், “ரஜினிகாந்த் நல்ல நடிகர். அவர் அரசியல் ரீதியாக இயக்கம் ஆரம்பித்த பின்னரே அவருடைய அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க முடியும்” என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon