மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

சிதம்பரம் சிறைக் குறிப்புகள்!

சிதம்பரம் சிறைக் குறிப்புகள்!

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறை விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன.சிறை எண் 7, வார்டு எண் 2 ,15 ஆம் நம்பர் செல்லில் அடைக்கப்பட்டுள்ளார் சிதம்பரம்.

முதன்முறையாக பொருளாதார குற்றப் பிரிவு கைதிகள், வரதட்சனை புகார் கைதிகள் ஆகியோர் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிதம்பரத்துக்கு ஆறு போர்வைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் மூன்றை அவருக்கு கொடுக்கப்பட்ட கட்டில்மீது போட்டுக் கொள்ளலாம். மீதி 3 போர்த்திக் கொள்ள பயன்படுத்தலாம். ஒரு மின்விசிறி, சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று வெஸ்டன் டாய்லெட் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள சிறைக்கு அடுத்த சிறையில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் அடைக்கப்பட்டுள்ளார்.

சிதம்பரத்திற்கு முன் இதே சிறை அறையில் கார்த்தி சிதம்பரம், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மச்சான் ரத்துல் பூரி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் ஈடுபட்ட தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் உள்ளிட்டோர் இப்போது சிதம்பரம் இருக்கும் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தனர்.

சிறை எண் 7 இரண்டு வகையான செல்களை கொண்டது. ஒரே ஒரு நபர் மட்டும் அடைக்கப்படும் செல், 3 பேர் அடைக்கப்படும் செல் என இரண்டு வகையான அறைகள் ஏழாம் எண் சிறையில் அமைக்கப்பட்டுள்ளன.

சிதம்பரத்துக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அவருக்கு தனி செல் ஒதுக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து கைதிகளும் அவரவர்க்குரிய செல்களில் அடைக்கப்பட்டு இருப்பார்கள்.

காலையில் டீயும் பிஸ்கட்டும் வழங்கப்படும். காலை உணவுக்கு முன்னர் விருப்பமுள்ள சிறைக்கைதிகள் சிறையில் நடக்கும் யோகா பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

காலை 8 மணி முதல் 9 மணி வரை காலை டிபன் வழங்கப்படும். அதை வரிசையில் நின்று வாங்கிக் கொள்ள வேண்டும்.

மதிய உணவு காலை பத்து முப்பதுக்கு மேல் 11 30 க்குள் வழங்கப்படும்

விசாரணைக் கைதிகளுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. அவர்கள் நடைப்பயிற்சி, சிறை நூலகத்தில் புத்தகம் வாசித்தல் என பகல் பொழுதை கழிக்கலாம். சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம்.

சிதம்பரத்துக்கு அவரது குடும்பத்தினர் கொடுத்த முக்கியமான புத்தகங்களை சிறைக் கண்காணிப்பாளர் அனுமதித்தால் மட்டுமே சிறைக்குள் அனுப்பப்படும்.

இரவு உணவு 6.45 மணிக்கு வழங்கப்படும். இரவு 9 மணி வரை மற்ற கைதிகளோடு டிவி பார்க்கலாம். வழக்கறிஞர்களை தவிர சிதம்பரத்தை அவரது குடும்பத்தினர் நண்பர்கள் ஒரு நாளைக்கு 10 பேர் வீதம் சந்திக்க அனுமதி உண்டு.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon