சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
காமெடி நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக வலம் வரும் சந்தானம் கவுண்டமணியின் பாணியையே தனது பாணியாக மாற்றிக்கொண்டார். காட்சிகளின் இடையில் அவர் அடிக்கும் ‘பஞ்ச்’ வசனங்கள் அனைத்தும் கவுண்டமணி இப்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்குமோ அப்படியே அமைந்திருக்கும். ஆனால் அதையே தனக்கான அடையாளமாக மாற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது அவரது பிரபலமான வசனங்களை தனது படங்களுக்கான தலைப்பாக மாற்றிவருகிறார். விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘டகால்டி’ எனப் பெயரிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்துக்கு ‘டிக்கிலோனா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த காட்சியில் ‘டிக்கிலோனா’ என்ற பெயர் இடம் பெறும். அதையே தற்போது தலைப்பாக்கியுள்ளார். ஏற்கெனவே பிரபலமான வார்த்தைகளை தலைப்பாக்கும் போது அது ரசிகர்களிடையே எளிதாக சென்றடைகிறது.
மாநகரம் படத்திற்கு வசனம் எழுதிய கார்த்திக் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகன், வில்லன், காமெடியன் என மூன்று முக்கிய பாத்திரங்களையும் சந்தானம் ஏற்றுள்ளார். நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கேஜேஆர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?
ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்
வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு
ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்
பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்