மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

நிலாவில் கால் பதிக்கும் சவாலில் சந்திராயன் 2!

நிலாவில் கால் பதிக்கும் சவாலில் சந்திராயன் 2!

சந்திராயன் 2 விண்கலத்தை, நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலாவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்..

நிலாவின் தென்துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் நிலாவை நெருங்கிய நிலையில் தற்போது கடைசி சுற்றுவட்டப்பாதையில் சங்கமித்துள்ளது.

நிலாவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தின் இறுதி மற்றும் 5வது கட்ட நீள்வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செப்டம்பர் 1 ஆம் தேதியன்று மேற்கொண்டனர். விக்ரம் லேண்டர் குறைந்தபட்சம் 119 கிமீ தொலைவையும் அதிகபட்சம் 127 கிமீ தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் தேதியன்று, 1.15மணியளவில், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக சந்திராயன் 2 ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. செப்டம்பர் 3ஆம் தேதி, லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டது. சந்திராயன் 2 விண்கலத்தில் லேண்டர் நிலாவின் அருகில்(109 கி.மீ) கொண்டு செல்லப்படது. பின், செப்டம்பர் 4 ஆம் தேதியன்று, இன்னும் நெருக்கமாக 36 கி.மீ அருகில் கொண்டு செல்லபட்டது.

இந்நிலையில், சந்திராயன்-2 விண்கல திட்டத்தின் முக்கியமான நிகழ்வு நாளை (செப்டம்பர் 5) அதிகாலையில் நடக்கவுள்ளது. விக்ரம் லேண்டர் நாளை அதிகாலை 1 மணி முதல் 2மணியளவில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், நிலாவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து உள்ளனர்.

நிலாவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்படுகிறது. நிலாவில் தரையிறக்குவதற்காக சரியான சமதளப்பரப்பை தேர்வு செய்த பின், சரியாக 1.55 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலாவில் தரையிறங்கும் எனக் கூறியுள்ளது இஸ்ரோ.

அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வை தொடங்க உள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை ஒரு நிலா நாள் (14 பூமி நாட்கள்) நிலாவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும்.

இதுவரை நிலாவின் வடதுருவத்தில் மட்டுமே அனைத்து விண்கலங்களும் ஆராய்ச்சி செய்துள்ள நிலையில், முதன் முறையாக சந்திராயன் 2 நிலாவின் தென் துருவத்தில் ஆராய்ச்சியை தொடங்கவுள்ளது.

இஸ்ரோவின் கன்ட்ரோல் ரூமிலிருந்து சந்திராயன் 2, நிலாவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பள்ளிக் குழந்தைகள் நேரலையில் பார்க்க உள்ளனர். மேலும், இந்நிகழ்வை அனைவரும் நேரலையில் கண்டுகளிக்க இஸ்ரோவின் யுடியூப் சானலை பார்க்கலாம்.

இஸ்ரோவின் யுடியூப் சானல்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon