மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

மாணவர் நீக்கம்: சென்னை பல்கலைக்கழகம் விளக்கம்!

மாணவர் நீக்கம்: சென்னை பல்கலைக்கழகம் விளக்கம்!

தகுதி சான்றிதழ் இல்லாததாலேயே மாணவர் நீக்கப்பட்டார் என சென்னை பல்கலைக்கழக தத்துவவியல் துறைத்தலைவர் வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் துறையில் முதுகலை பயின்ற கிருபா மோகன் என்பவர் அத்துறையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவரது நீக்கத்துக்கு ஆளுநர் மாளிகை தலையீடு காரணம் என்று கூறப்படும் நிலையில் பல்கலை கழகத்தின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் இது அதிகாரம் அத்துமீறும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு இதழியல் துறையில் பட்டம் பெற்றவர் கிருபாமோகன். இந்த ஆண்டு தத்துவவியல் துறையில் முதுகலைப் பாடப்பிரிவில் சேர்ந்து படித்து வந்தார். இவர் இதழியல் துறையில் படிக்கும் போது, அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் இணைந்து செயலாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கிருபா மோகனின் அட்மிஷனை சென்னை பல்கலைக் கழகம் ரத்து செய்திருக்கிறது, கிருபா மோகன் எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் எனப்படும் தகுதிச் சான்றிதழை கொடுக்கவில்லை என கூறி அவரது அட்மிசன் ரத்து செய்யப்படுவதாக தத்துவவியல் துறை பேராசிரியர் வெங்கடாஜலபதி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து வெங்கடாஜலபதி கூறும் போது, “மாணவரிடம் தகுதிச்சான்றிதழ் வழங்குமாறு பல்கலைக்கழகம் சார்பில் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை அவரால் சமர்பிக்க முடியவில்லை. பல்கலைக்கழக விதிகளின் படியே அனைத்து துறைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

ஆனால் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டதாலும், ஆளுநர் மாளிகையின் அழுத்தம் காரணமாகவும் தனது அட்மிஷனை ரத்து செய்ததாக கிருபா மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கிருபா மோகன் மீதான நடவடிக்கையை கண்டித்து, அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் நேற்று பல்கலை வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வட்டத்தின் செயலாளர் இளவரசி, பொதுநல மாணவர்கள் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த வளர்மதி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். கிருபா மோகன் நீக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தின் செயலாளர் இளவரசி பேசுகையில், “அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் இருக்கிற மாணவர்களுக்கு துறை ரீதியாக மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்த வட்டத்துக்கு பல்கலை நிர்வாகம் தடை போடுகிறது. கிருபா மோகனின் நீக்கத்தை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவர் நீக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மாணவர்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆயத்தபணிகளையும் தொடங்கியிருக்கிறார்கள்.

கிருபாமோகனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காகவே பாசிச சக்திகள் பெரும் நெருக்கடி தந்து இவரை நீக்கியிருப்பதாக ஏடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன; அவரும் நேர்காணலில் சொல்லியிருக்கிறார். ஜனநாயகம் - அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையையும், கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையையும், நசுக்கிக் கொலை செய்யும் அதிகாரத்தை அத்துமீறும் இத்தகைய செயல்களை திமுக வன்மையாக கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

திக தலைவர் கி.வீரமணி, “புகழ்பெற்ற சென்னை பல்கலைக் கழகம் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவது கண்டனத்துக்குரியது. மாணவர் ரத்தை பல்கலைக் கழகம் நீக்காவிட்டால். அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் நாளை முதலே தொடங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பல்கலை மாணவர் நீக்கம்: ஆளுநர் மாளிகை தலையீடா?


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon