மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

லாபத்தில் இணைந்த இளம் நாயகர்கள்!

லாபத்தில் இணைந்த இளம் நாயகர்கள்!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் லாபம் படத்தில் பிரித்வி, கலையரசன் இணைந்துள்ளனர்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி புறம்போக்கு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் லாபம். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கிராமப்புற பின்னணியில் வலுவான அரசியல் கதையம்சத்துடன் உருவாகிறது இப்படம். தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் தன்ஷிகா இணைந்தார். ஜகபதி பாபுவுடன் இவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. தன்ஷிகா என்ன பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாண்டியராஜின் மகன் பிரித்வி பாண்டியராஜ் இப்படத்தில் புதிதாக இணைந்துள்ளார். மெட்ராஸ் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த கலையரசன் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் முன்னரே வந்தாலும், தற்போது படக்குழு அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் பிரித்வி - கலையரசன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

குற்றாலத்தில் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் சென்னையில் தொடங்கவுள்ளது.

டி.இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 7சிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய்சேதுபதி இந்தப் படத்தை தயாரிக்கிறார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon