மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்!

இயற்கை நம்மீது போர் தொடுத்துள்ளது. நாம் விழித்துக்கொள்ளவேண்டும்“ - சுனிதா நரேன், தலைவர், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நடுவம்(CSE)

ஆசிய அளவில் வெளிவரும் சூழலியல் பத்திரிக்கைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ‘டவுன் டூ எர்த்’ ஊடகமானது, ‘பாலைவனமாதல்’ எனும் தலைப்பில் செப்டம்பர் மாத சிறப்பிதழை வெளியிட்டது. 'அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நடுவம்' (Center for Science and Environment - CSE) சார்பாக சூழலியல் பத்திரிக்கையாளர்களுக்கான கருத்தரங்கு, புது டெல்லியில் செயல்பட்டு வரும் ‘இந்தியன் ஹாபிடேட் செண்டர்’ல் நேற்று(05/09/19) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இந்தியா மற்றும் ஆப்ரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சூழலியல் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இச்சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. CSE-ன் தலைவரான சுனிதா நரேன் சிறப்பிதழை வெளியிட, டவுன் டூ எர்த் ஊடகத்தின் எடிட்டர் ரிச்சார்ட் மஹபத்ரா பெற்றுக்கொண்டார்.

புத்தக வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றிய சுனிதா நரேன், “வெறும் 12 நாட்களில் 1000 - அதீத மழை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இதை நாம் அதிகமான மழை என்றெல்லாம் சொல்லி கடக்கக்கூடாது. இது அதீத மழை. ஒரு வாரம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துவிடுகிறது. கேரளாவில் வெள்ளம் வந்த சிறிது நாட்களில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. பெய்த மழை நீர் எங்கே போனது?” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஆப்ரிக்காவும் இந்தியாவும் பெயரளவில்தான் வேறு வேறாக இருக்கின்றன. மற்றபடி இருநாடுகளும் ஒரே மாதிரியான சூழலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றன. 10 வருடங்களுக்கு ஒரு முறை வந்த வெள்ளம், இப்போதெல்லாம் வருடா வருடம் வருகிறது. பருவநிலைகள்தான் இந்தியாவின் நிதி அமைச்சகம். அதை சரியாக நிர்வகிக்காமல் நம்மால் உயிர்வாழக்கூட முடியாது. பருவநிலையை பாதுகாக்க வேண்டுமென்றால், நாம் காடுகளையும் நீர் நிலைகளையும் பராமரிக்க வேண்டும். காடுகளும் நீர் நிலைகளும் நன்றாக இருக்கவேண்டுமானால், பழங்குடிகளுக்கு அவர்களின் நிலம் மீதான உரிமையை மீட்டுக்கொடுக்கவேண்டும். இயற்கை நம்மீது ஒரு போர் தொடுத்துள்ளது. நாம் விரைவில் விழித்துக்கொள்ள வேண்டும்” என்று முடித்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon