மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

ஆவின் பால் –டாஸ்மாக் கடை : நீதிபதிகள் ஒப்பீடு!

ஆவின் பால் –டாஸ்மாக் கடை : நீதிபதிகள் ஒப்பீடு!

உரிய ஆதாரம் இன்றி வழக்குத் தொடர்ந்ததாக பால் விலை உயர்வுக்கு எதிரான மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 6) தள்ளுபடி செய்துள்ளது,

தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் பால் விலை உயர்த்தப்பட்டு, அது கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து திருவண்ணாமலையைச் சேர்ந்த முனி கிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது நியாயமாக இருந்தாலும் விற்பனை விலையை ரூ.6 வரை உயர்த்தியது தவறான முன்னுதாரணமாகும். தனியாரால் விற்கப்படும் பால் விலை அதிகமாக இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஆவின் பாலை மட்டும் நம்பியிருந்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் லாபத்துக்காக அரசு நிதியைச் செலவு செய்யும் அரசியல்வாதிகள், அந்த நிதிச் சுமையை பொதுமக்கள் மீது சுமத்துகின்றனர். அரசின் இந்த நடவடிக்கையால் தனியார் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பால் விலையை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதிகள், உரிய ஆதாரம் இன்றி வழக்கு தொடர்ந்தாக முனி கிருஷ்ணனின் மனுவைத் தள்ளுபடி செய்தனர். ஆதாரம் இன்றி வழக்கு தொடர்ந்தது ஏன்? ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள், டாஸ்மாக் கடைகளுக்கு மது குடிக்கச் செல்வோரைத் தடுக்க என்ன செய்தீர்கள்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon