மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்

பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட நிலையில், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிந்ததையடுத்து, நேற்று (செப்டம்பர் 5) ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, “சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. ஆனால், அதைத் தவிர்க்கும் பொருட்டு, அமலாக்கத் துறையிடம் ஆஜராகத் தயார் என்று சிதம்பரம் தரப்பு வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி அஜய் குமார் குஹார், சிதம்பரத்தை வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அழைத்துச் சென்றனர் காவல் அதிகாரிகள்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர் ஒருவர், திகார் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது தொடர்பாக கருத்தேதும் கூற விரும்புகிறீர்களா என்று சிதம்பரத்திடம் கேள்வி எழுப்ப, “என்னுடைய கவலையெல்லாம் பொருளாதாரச் சரிவு பற்றி மட்டுமே உள்ளது” என்று பதிலளித்துவிட்டுச் சென்றார்.

திகாரில் சிதம்பரம்

சிதம்பரத்துக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து ஏஎன்ஐ ஊடகத்திடம் பேசிய திகார் சிறையின் இயக்குநர் சந்தீப் கோயல், “சிறையில் சிதம்பரம் 7ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு உணவாக ரொட்டி, பருப்பு மற்றும் காய்கறிக் கூட்டு ஆகியவை அளிக்கப்படும். நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு வெஸ்டர்ன் டாய்லெட் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்படும்” என்று தகவலளித்தார்.

இதற்கிடையே தனது தந்தைக்கு நீதிமன்றக் காவல் வழங்கியதில் எவ்வித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்த அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், “11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு, இதுவரை சிபிஐ குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யவில்லை. சிபிஐயின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்காது. என் தந்தை மிக விரைவில் வீடு திரும்புவார்” என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


ஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon