மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் உப்புமா

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் உப்புமா

குருசிஃபேரஸ் (Cruciferous) காய்கறி குடும்பத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துருக்கி நாட்டு மக்களால் உணவாக உட்கொள்ளப்பட்டது என்று கி.மு 600இல் வாழ்ந்த ரோம் நாட்டு தத்துவ மேதையும், கடற்படை தளபதியுமான பிலினி (Plini) தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார். ஆனால், உலகத்தின் பிற பகுதிகளான இத்தாலி, ஸ்பெயின், எகிப்து, போர்ச்சுகல் போன்ற மற்ற நாடுகளை வந்தடைந்தது 12ஆம் நூற்றாண்டில்தான். காலிஃப்ளவர் என்றால் சைடிஷ் உணவுதானே என்று நினைக்கும் பலருக்கு, இந்த காலிஃப்ளவர் உப்புமா முக்கிய உணவாக அமையும்.

என்ன தேவை?

துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்

சிறிய சைஸ் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

வேர்க்கடலை – 2 டீஸ்பூன்

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - அரை கப்

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் வேர்க்கடலை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கி, தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பின்னர் துருவிய காலிஃப்ளவர் மற்றும் உப்பைச் சேர்க்கவும். 5 முதல் 8 நிமிடங்கள் வரை அல்லது தண்ணீர் வற்றும் வரை வேகவைக்கவும். உதிரி உதிரியாக வரும்போது அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.

சிறப்பு

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை காலை நேர உணவாக உண்ணலாம்.

நேற்றைய ரெசிப்பி: காலிஃப்ளவர் 65


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


ஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது